[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

இன்று சச்சின் ஓய்வு பெற்ற தினம் - நினைவுகளை பகிரும் ரசிகர்கள்

sachin-tendulkar-retirement-day-today-fans-shares-sachin-memories

கிரிக்கெட் உலகின் மாபெரும் ஆளுமை எனக் அழைக்கபடும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற தினம் இன்றாகும். 

கிரிக்கெட் உலகில் இதுவரை யாரும் எட்ட முடியாத சாதனையை படைத்துள்ளவர் சச்சின். இந்தியா ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் அல்லது தோல்வி அடைந்தாலும் டெண்டுல்கர் ஆட்டத்தை பார்ப்பதற்கே ஒரு தனி ரசிகர் கூட்டம் அந்தக் காலத்தில் இருந்தது. 

1989ஆம் ஆண்டு பாகிஸ்தானிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தனது கிரிக்கெட் வாழ்க்கை
யை தொடங்கிய சச்சின் டெண்டுல்கர், 2013-ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி ஓய்வு பெற்றார். 200 டெஸ்ட் போட்டிகள், 463 ஒருநாள் போட்டிகள் ஒரு டி20 போட்டி மற்றும் 78 ஐபிஎல் போட்டிகளில் சச்சின் விளையாடியுள்ளார். 

ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்கள், டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களை இவர் குவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் அதிக பட்ச ரன்களாக 200 ரன்களை எடுத்துள்ளார். இதுமட்டுமின்றி ஒருநாள் போட்டியில் 154 விக்கெட்டுகள் மற்றும் டெஸ்ட் போட்டியில் 46 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். 

இந்த நாள் வரையிலும் கிரிக்கெட் உலகின் சாதனை மன்னன் என்ற பட்டத்தை தக்க வைத்துள்ளவர் சச்சின். கிரிக்கெட் உலகில் தற்போது கூட ஒரு வீரர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்தால், அவரை புகழும் விதமாக சச்சினை போன்று வருவார் என ஒப்பிட்டு கூறுவது வழக்கமாக உள்ளது. உதாரணத்திற்கு விராட் கோலியை சச்சின் டெண்டுல்கருடன் பலரும் ஒப்பிட்டு  கூறி வருகின்றனர். 

ஆனால் டெண்டுல்கருடன் ஒப்பிடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என சச்சின் ரசிகர்கள் வாதம் செய்து வருகின்றனர். இன்று சச்சினின் ஓய்வு தினம் என்பதால் அவரது புகைப்படங்கள் மற்றும் சாதனைகளை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

எந்தக் காலத்தில், எத்தனை பேட்ஸ்மேன்கள் வந்தாலும் சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக முடியாது என்பதே கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. ஏனென்றால் சச்சின் காலத்தில் இருந்த போன்ற பவுலர்  ஜாம்பவான்கள் தற்போதைய காலத்தில் இல்லை. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close