[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

இன்று கடைசி ஒரு நாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்திய அணி?

india-aim-6th-consecutive-bilateral-odi-series-win-at-home

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது. 

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இப்போது விளையாடி வருகிறது. முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி சமனில் முடிந்தது. 3-வது போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

மும்பையில் நடந்த 4-வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 162 ரன்களும் அம்பத்தி ராயுடு 100 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து இந்தத் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.


கடந்த போட்டியில் ஆக்ரோஷமாக எழுந்த இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை 153 ரன்களில் சுருட்டியது. அதே தெம்புடன் இன்றைய போட்டியிலும் களமிறங்கும். இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தொடர்ந்து 8-வது முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றும். அதோடு இந்திய மண்ணில் தொடர்ந்து ஆறாவது தொடரை கைப்பற்றிய பெருமையும் கிடைக்கும். 

மூன்று போட்டிகளில் தொடர்ந்து சதம் அடித்த கேப்டன் விராத் கோலி, முதல் மற்றும் நான்காவது போட்டியில் சதங்கள் விளாசிய ரோகித் சர்மா, கடந்த போட்டியில் 100 ரன்கள் விளாசிய அம்பத்தி ராயுடு ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். கீப்பிங்கில் கலக்கும் தோனி, பேட்டிங்கில் பெரிய அளவில் சோபிக் கவில் லை. அவர் அடித்து ஆட வேண்டும் என்பதை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க் கின்றனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றி வருகிறார் தோனி. இன்றைய போட்டியில் அவர் ஒரு ரன் எடுத்தால், பத்தாயிரம் ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இடம் பிடிப்பார். 

பந்து வீச்சை பொறுத்தவரை இளம் வீரர் கலீல் அகமது கடந்த போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அவர் இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கலாம். பும்ரா, ஜடேஜா, குல்தீப் ஆகியோரும் சிறப்பாக பந்துவீசுகின்றனர். புவனேஷ்வர்குமார் இன்னும் நன்றாக வீசினால், இன்றைய போட்டியும் இந்திய அணிக்கு சாதகமாக மாறும்.

ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில், விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப், ஹெட்மையர், ஹோல்டர் ஆகியோர் ஃபார்மில் இருக்கின்றனர். ஹெட்மையர் மிரட்டுகிறார். மற்றவர்கள் பேட்டிங் குறிப்பிடும்படி இல்லை. இருந்தாலும் அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது. இந்த போட்டியின் மூலம் கிடைக்கும் லாபத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க கேரள கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த மைதானத்தில் சர்வதேச ஒரு நாள் போட்டி நடக்க இருப்பது இதுதான் முதல் முறை. கடந்த ஆண்டு இங்கு, நியூசிலாந்துடன் டி20 போட்டி நடந்தது குறிப்பிடத்தக்கது. 

பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close