[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா- ஹாங்காங் இன்று மோதல்!

asia-cup-2018-india-ready-to-meet-hong-kong

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் நான்காவது லீக் போட்டியில் இந்தியா- ஹாங்காங் அணிகள் இன்று மோதுகின்றன.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் ஆகிய  அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் இலங்கையை, பங்களாதேஷ் அணி வென்றது. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான், ஹாங்காங்கை வென்றது. மூன்றாவது போட்டியில் இலங்கை -ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இதில் தோற்று தொடரில் இருந்து இலங்கை அணி பரிதாபமாக வெளியேறியது. இந்நிலையில் இன்று நான்காவது போட்டி நடக்கிறது. இதில், இந்தியா -ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. ஹாங்காங் அணி தனது தொடக்க லீக் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது.

Read Also -> விராத் கோலி இல்லைனா என்னங்க? கேட்கிறார் கங்குலி!

Read Also -> நிமிரும் ஆப்கான்... சரியும் இலங்கை: சட்டென மாறுது கிரிக்கெட் வானிலை! 

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் வலிமையாக இருக்கிறது. ரோகித் சர்மா, தவான், கே.எல். ராகுல், கேதர் ஜாதவ், அம்பத்தி ராயுடு ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். முன்னாள் கேப்டன் தோனியும் தனது திறமையை காண்பித்தால் இந்திய அணி அதிக ரன்கள் குவிக்கும். இருந்தாலும் நான்காவது மற்றும் ஆறாவது வரிசை இடம்தான் இந்திய அணிக்கு தலைவலியாக இருக்கிறது. 

பந்து வீச்சில் பும்ரா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், சேஹல் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். வலுவான இந்திய அணியை, ஹாங்காங் சமாளிப்பது கடினம்தான். ஏற்கனவே 2008- ஆம் ஆண்டில் நடந்த ஆசியக் கோப்பைப் போட்டியில் 256 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை, இந்திய அணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழையும் முனைப்பில் இருக்கிறது. ஹாங்காங் அணி தோல்வி அடைந்தால் போட்டியில் இருந்து வெளியேறிவிடும் என்பதால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும். போட்டி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close