[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமமுக கடைசிவரை குழுவாக மட்டுமே இருக்க முடியும்; கட்சியாக மாற வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS அமமுகவை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு!
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.69 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.01 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

ஐபிஎல் கிரிக்கெட்: 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது ஹைதராபாத்

ipl-hyderabad-8th-won

ஐபிஎல் கிரிக்கெட்டில், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதரபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து தொடரில் 8-வது வெற்றியை ஈட்டிய ஹைதராபாத் அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது.

மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹாஷிம் ஆம்லா 56 பந்துகளில் 96 ‌ரன்கள் விளாசினார். சாஹா, குர்கீரத் சிங் ஆகியோர் தலா 27 ரன்கள் எடுத்தனர். புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

180 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய ஹைதராபாத் அணியில், தொடக்க வீரர்களான ஷீகர் தவான் 25 ரன்களும், கேப்டன் வார்னர் 52 ரன்களும் எடுத்தனர். தீபக் ஹூடா 34 ரன்கள் விளாசினார். 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த யுவராஜ் சிங்கும், பென் கட்டிங்-கும் வேகமாக ரன்கள் சேர்க்க, 2 பந்துகள் மீதமருந்த நிலையில் ஹைதராபாத் அணி இலக்கை எட்டியது. யுவராஜ் சிங் 41 ரன்களுடனும், கட்டிங் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close