[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் (வயது 62) உயிரிழப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.08 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.32 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS தேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் - மதுரை விமானநிலையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
  • BREAKING-NEWS மதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை - த.மா.கா தலைவர் வாசன் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்

என்னதான் ஆச்சு கோலிக்கு..! - அஸ்வின் மீது அவ்வளவு கோபமா..?

if-kohli-is-holding-ashwin-back-just-based-on-the-off-spinner-to-left-handers-theory-that-is-poor-poor-captaincy

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் முற்றிலும் மழையால் ரத்து ஆனது. இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில், 35.2 ஓவர்களில் 107 ரன்களுக்கு சுருண்டது. லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணியின் குறைந்த ஸ்கோர் இது. இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் 5 விக்கெட்டையும் வோக்ஸ் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். பிராட், சாம் குர்ரன் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

இதனையடுத்து, மூன்றாவது நாளான இன்று இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. 37 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 151 எடுத்து இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. முகமது சமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இஷாந்த் சர்மா, ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 

                     

இந்தப் போட்டியில், 38 ஓவர்கள் வரையிலும் அஸ்வினை பந்துவீச அழைக்கவில்லை. முதல் 12 ஓவர்களை முகமது சமியும், இஷாந்த் சர்மாவும் வீசினர். பின்னர், ஹர்திக் பாண்ட்யாவும், குல்தீப் யாதவும் பந்து வீசினர். 32 ரன்னிற்குள் 2 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், ரூட், போப் நிலைத்து நின்று ஆடினர். ஆனால், கடந்த டெஸ்ட் போட்டியில் விக்கெட்டுகளை குவித்த அஸ்வின் பந்து வீசவில்லை. இவ்வளவு ஓவர்கள் வரை ஏன் அஸ்வின் பந்துவீச அழைக்கப்படவில்லை என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. 

32 ரன்களுக்கு இரண்டு விக்கெட் வீழ்ந்த நிலையில், அஸ்வின் உடனடியாக பந்துவீசியில் அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்ந்திருக்கும். ஆனால், குல்தீப் யாதவ் பந்து வீசினார். அப்போது கிரீஸில் இருந்து வலது கை ஆட்டக்காரர் என்பதால் குல்தீப்பை தேர்வு செய்திருக்கலாம். ஆனால், அஸ்வின் ஒரு சர்வதேச தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். எந்த வகையான ஆட்டக்காரராக இருந்தாலும், அவர்களின் விக்கெட்டை வீழ்த்தும் திறன் அவரிடம் உள்ளது.

               

ஏன் கேப்டன் விராட் கோலி இவ்வாறு செயல்படுகிறார்? என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர். 11 பேர் கொண்ட வீரர்களை தேர்வு செய்வதில் கோலி மீண்டும் சொதப்படுகிறார் என்று கூறுகின்றனர். இந்தப் போட்டியில் உமேஷ் யாதவ்க்கு பதிலாக குல்தீப் யாதவ் எடுக்கப்பட்டுள்ளது விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. ஏன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக குல்தீப் எடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர். டெஸ்ட் போட்டியில் ஏன் ஹர்திக் பாண்ட்யா தக்க வைக்கப்படுகிறார் என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

                

முன்னதாக, இந்தாண்டு ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ரகானேவுக்கு பதிலாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டதும் விமர்சனத்திற்குள்ளானது. மொத்தத்தில், விராட் கோலியின் கேப்டன் ஷிப் மற்றும் தேர்வு குழு மீதும் தற்போது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close