[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

அதற்குள் 5 விக்கெட்: ரபாடா, நிகிடி வேகத்தில் திணறும் இலங்கை!

sri-lanka-bat-south-africa-pick

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில், இலங்கை அணி அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த அந்த அணி அடுத்து, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் இன்று தொடங்கியது.

காயத்தில் இருந்து மீண்டு இலங்கை கேப்டன் மேத்யூஸ் அணிக்கு திரும்பியுள்ளார். கேப்டனாக இது அவருக்கு நூறாவது போட்டி. 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு அணியை தயார்படுத்துவதற்கு ஏதுவாக இந்த தொடரில் சில சோதனை முயற்சிகளை மேற் கொள்வோம் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த தொடரில் பந்து வீசுவதில்லை என்றும் அவர் முடிவு செய்துள்ளார். 

போட்டி நடக்கும் தம்புல்லா ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த அணிகள் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடிய போது 5 ஆட்டங்களிலும் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளும் கடைசியாக சந்தித்த 10 ஒரு நாள் போட்டிகளில் 9-ல் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், டிக்வெல்லாவும் தாரங்காவும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கி வீசப்பட்ட மூன்றாவது பந்தில் டிக்வெல்லா 2 ரன்னில் அவுட் ஆனார். ரபாடா வீசிய பந்தை அவர் அடித்தபோது ஷம்சியின் கையில் கேட்சாகத் தஞ்சமடைந்தது. அடுத்து குசால் மெண்டிஸ் வந்தார். ரபாடாவின் 2 ஓவரின் நான்காவது பந்தில், மெண்டிஸை தூக்கினார். விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் மெண்டிஸ். அடுத்து பொறுமையாக விளையாடிக் கொண்டிருந்த தாரங்காவை அபாரமாக ரன் அவுட் ஆக்கினார் டுமினி.

அடுத்து நிகிடி தன் பங்குக்கு அட்டாக்கைத் தொடங்கினார். அவர் வீசிய பவுன்சர் பந்து மேத்யூஸ் பேட்டில்பட்டு ஸ்லிப்புக்கு பாய்ந்தது. அதை அழகாக கேட்ச்சாக்கினர் ஆம்லா. அடுத்து வந்த சேஹன் ஜெயசூர்யா, எட்டு பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார். அவர் விக்கெட்டையும் ரபாடா அள்ளினார். இதனால் அந்த அணி, 9 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. 

குசல் பெரேராவும் திசாரா பெரேராவும் இப்போது ஆடி வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close