[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

“நான் கண்ணை மூடி பார்க்கும் போது” - கங்குலி சொன்ன பேட்ஸ்மேன் !

sourav-ganguly-said-who-is-fit-for-india-4th-place-batsman

இந்திய அணியில் 4வது வீரராக களமிறங்க ஏற்ற வீரர் யார்? என்ற கேள்விக்கு, முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி பதிலளித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வியடைந்து, கோப்பையை நழுவவிட்டுள்ளது இந்திய அணி. இதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுவது, வலுவான பந்துவீச்சாளர்கள் இல்லை மற்றும் விக்கெட் விழும் நேரத்தில் நிலைத்து ஆடும் பேட்ஸ்மேன் இல்லை என்பது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 269 என்ற இலக்கை எதிர்த்து விளையாடியது. அதை 2 விக்கெட் மட்டுமே இழந்த நிலையில் 40.1 ஓவரில் எளிதில் எட்டியது. காரணம் ரோகித் ஷர்மா 137 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் 4வது வீரராக களமிறங்கியது, லோகேஷ் ராகுல். அவர் 18 பந்துகளில் 9 ரன்கள் குவித்திருந்தார். இதில் ராகுல் ரன் சேர்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

(இதையும் படிங்க : அதிரடி.. ஆக்ரோஷம்... ஆரவாரம்...கங்குலி என்னும் நான்..!)

இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 323 என்ற கடினமான இலக்கை எதிர்த்து விளையாடியது. இதில் ரோகித் 15 (26) மட்டுமே எடுத்து வெளியேறினார். தவான் 36 (30), கோலி 45 (56) ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். விக்கெட்டுகள் விழும் நேரத்தில் நிலைத்து விளையாடக்கூடிய 4வது இடத்தில் களமிறங்கிய ராகுல், 0 (2) ரன்னில் அவுட் ஆனார். இது இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில், ராகுல் நீக்கப்பட்டு அவருக்கு பதில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார்.

ராகுல் கோட்டைவிட்ட இடத்தை தினேஷ் பூர்த்தி செய்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு 2 (18) ரன்களில் ரோகித் வெளியேறியது அதிர்ச்சி அளித்தது. ஆனால் தவான் மற்றும் விராட் கோலி நிலைத்து விளையாடி ரன்களை உயர்த்தினர். தவான் 44 (49) ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து 4வது வீரராக களமிறங்கினார் தினேஷ். தொடக்கத்தில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 21 (22) ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட, அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தது. ரெய்னா 1 (4) ரன்னில் வெளியேறினார். இதனால் இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 256 ரன்கள் சேர்க்க, இங்கிலாந்து எளிதில் வெற்றி பெற்றது. 

இந்த தொடர் குறித்து கூறும் கிரிக்கெட் நிபுணர்கள், இந்தியாவில் 4வது இடத்தில் விளையாட சரியான வீரர் கிடைக்காததே காரணம் என்று கூறுகின்றனர். இந்நிலையில் ‘தாதா’ என்று அழைக்கப்படும் கிரிக்கெட் ஜாம்பவான் கங்குலியிடம், இந்திய அணியில் 4-வதாக களமிறங்க ஏற்ற வீரர் யார்..? என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அவரும் தான் கண்ணை மூடி பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி கண்ணை மூடி பார்த்த கங்குலி, “நான் கண்ணை மூடி பார்க்கும் போது, எனக்கு ராகுல் தான் தெரிந்தார்” என்று கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ராகுல் 54 பந்துகளில் 101 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close