[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

பாண்ட்யா பயமில்லாத வீரர்: ரோகித் சர்மா

i-like-to-be-calm-not-to-panic-too-much-rohit-sharma

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3வது போட்டி பிரிஸ்டலில் நேற்று நடைபெற்றது. 

டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டு களை இழந்து 198 ரன்கள் எடுத்தது. ஜேசன் ராய் 67 ரன்களும், பட்லர் 34 ரன்களும், ஹேல்ஸ் 30 ரன்களும் எடுத்தனர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி, 220 ரன்களுக்கும் மேல் குவிக்கும் என்ற நிலையில் இந்திய பந்துவீச்சாளர்கள் அதைக் கட்டுப் படுத்தினார்கள். ஹர்திக் பாண்ட்யா அபாரமாக பந்துவீசி, 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் அவர்களின் ரன் வேகம் கட்டுப்படுத்தப் பட்டது. தொடர்ந்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, ரோகித் சர்மாவின் அதிரடியால் 18.4 ஓவர்க ளில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா, 56 பந்தில் 5 சிக்சர்கள், 11 பவுண்டரிகளுடன் 100 ரன்களும் கேப்டன் விராத் கோலி 43 ரன்களும் ஹர்திக் பாண்ட்யா 14 பந்துகளில் 2 சிக்சர், 4 பவுண்டரியுடன் 33 ரன்களும் எடுத்தனர். ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.'

இந்த சதம் ரோகித் சர்மாவுக்கு மூன்றாவது டி20 சதம் ஆகும். இதற்கு முன் தென்னாப்பிரிக்காவுக்கு (2015) எதிராகவும் இலங்கைக்கு (2017) எதிராகவும் டி20 போட்டியில் சதம் அடித்துள்ளார். இதன் மூலம் டி20 போட்டியில் மூன்று சதம் அடித்துள்ள நியூசிலாந்தின் காலின் முன்றோ சாதனையை சமன் செய்தார் ரோகித். 

வெற்றிக்கு பின்னர் ரோகித் சர்மா கூறும்போது, ‘இந்தப் போட்டியில் நான் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. போட்டியை தொடங்கும் முன் சூழ்நிலைகளை அறிந்துகொள்வது முக்கியம். விக்கெட், பேட்டிங்கிற்கு உகந்ததாக இருந்தது என்பதை தெரிந்துகொண்டோம். முதலில் என்னை நிலைப்படுத்திக் கொண்டு ஆட வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படியே விளையாடினேன். நான் அமைதியை விரும்புபவ ன். அதிகம் பீதியடைய மாட்டேன்.

முதலில், விக்கெட் இழக்காமல் நின்றால் பின்னர் ரன்களை குவிக்கலாம் என்று நினைத்து ஆடினேன்.  மிடிலில் சிறிது நேரம் நின்று ஆடுவது முக்கியம். அதோடு பந்துவீச்சாளர்களை கவனிப்பதும் முக்கியம். ஹர்திக் பாண்ட்யா சிறந்த வீரர். கடந்த சில வருடங்களாக அவர் சிறப்பாக ஆடிவருகிறார். அவர் பந்துவீசிய விதம் நம்பிக்கை அளித்திருக்கிறது. அவர் பயமற்ற வீரர். அத னால்தான் அணி அவரிடம் அதிரடியை எதிர்பார்க்கிறது’ என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close