[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.
  • BREAKING-NEWS நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்
  • BREAKING-NEWS மதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு
  • BREAKING-NEWS ஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்? - தம்பிதுரை எம்.பி.
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது? - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி

“யாரும் பார்க்காத போது கொண்டாடுவார்” - 4 வரியில் உருகிய சேவாக்

sehwag-wish-about-ganguly-birth-day

கங்குலி பிறந்த நாளையொட்டி அவர் பற்றிய நான்கு வரிகளை சேவாக் பகிர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எத்தனை ஸ்டார் வீரர்கள் வந்தாலும், ‘தாதா’ என்ற பெயருக்கு தனி கெத்து உண்டு. அந்த கெத்துக்கு
உரிய நபர் தான் ‘கங்குலி’. இவருக்கு ‘பெங்கால் டைகர்’, ‘கொல்கத்தா இளவரசர்’ உள்ளிட்ட வேறு சில பெயர்களும் உண்டு. சச்சின்
டெண்டுல்கர் புகழின் உச்சத்தில் இருந்த அதே காலக்கட்டத்தில் தான், கங்குலி சாம்ராஜ்யமும் இருந்தது. சச்சினுக்கு ஒரு தனி ரசிகர்
கூட்டம் இருந்ததைப் போல, கங்குலிக்கும் ஒரு தீவிர ரசிகர் கூட்டமே இருந்தது. தற்போதும் இருவருக்கும் அந்தக் கூட்டம் உள்ளது. 

இன்று கங்குலியின் 46வது பிறந்த தினம். இதையொட்டி கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் மற்றும் கங்குலியின் ரசிகர்கள் அவருக்கு
பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பலர் கங்குலியின் பெருமைகளை சமூக வலைதளங்களில் புகழ்ந்து
வருகின்றனர். அதன்படி, ட்விட்டரில் பதிவிட்ட சேவாக், கங்குலி தொடர்பாக நான்கு வரிகள் புகழ்ந்து எழுதியுள்ளார்.

கங்குலி வழக்கமாக அடிக்கும் ஃபேவரட் ஷாட், பிட்ச்சில் இறங்கி வந்து சிக்ஸர் அடிப்பது தான். இதுதொடர்பாக கூறியுள்ள சேவாக்,
“எழுவாய், கண்களை சிமிட்டுவாய், அத்துடன் களத்தில் இறங்கி நடனமாடுவாய்” என்று கூறியுள்ளார்.

கங்குலி அடித்த சிக்ஸர்கள் வேடிக்கை பார்க்கும் ரசிகர்கள் மீது பலமுறை விழுந்துள்ளது. அதில் சிலருக்கு ரத்தக் காயங்களும்
ஏற்பட்டுள்ளது. இதைக் குறிப்பிட்ட சேவாக், “பந்துவீச்சாளரை அடித்து நொறுக்குவாய், அதேநேரத்தில் ரசிகர்களையும் நொறுக்குவாய்
(வன்முறையை குறிக்கு நோக்கமல்ல)” என்று தெரிவித்துள்ளார்.

பேட்டிங் மட்டுமின்றி பல நேரங்களில் பந்துவீச்சிலும் கங்குலி களம் காண்பார். இதுதொடர்பாக கூறியுள்ள சேவாக், “பந்து மட்டும்
சுழலாது, உன் முடியும் சுழலும், அவரது பந்துவீச்சு உங்கள் இதயத்தை அவுட் ஆக்கிவிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒருமுறை இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியின் போது கங்குலி தனது ஜெஸ்ஸியை கழட்டி சுற்றியதை யாரும் மறக்க முடியாது.
இதைக் குறிப்பிட்டுள்ள சேவாக், “யாரும் பார்க்காத போது கொண்டாடுவார். ஒரு அற்புதமான மனிதர்” என உருக்கமாக பிறந்த நாள்
வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close