[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்

மயங்க் அகர்வால் மீண்டும் சதம்: அசத்திய இந்திய ஏ அணி!

mayank-agarwal-s-second-hundred-in-consecutive-days

இந்திய ஏ அணியில் இடம்பெற்றுள்ள மயங்க் அகர்வால் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக அபார சதம் அடித்தார். இந்த தொடரில் அவர் அடித்துள்ள இரண்டாவது சதம் இது.

இந்திய ஏ அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து முத்தரப்பு ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா ஏ, வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்து லயன்ஸ் அணியும் மோதின. இதில் இங்கிலாந்து லயன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஏ, இந்திய ஏ அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த தொடரின் நான்காவது போட்டியில் இந்திய ஏ அணியும் இங்கிலாந்து லயன்ஸ் அணியும் நேற்றுமுன்தினம் மோதின.

டாஸ் வென்ற இந்திய ஏ அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி மயங்க் அகர்வாலும் சுப்மன் கில்லும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடினர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் இந்திய ஏ அணி, 6 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் அதிரடியாக விளையாடி 104 பந்துகளில் 112 ரன்கள் எடுத்தார். இந்தத் தொடரில் அவரது இரண்டாவது சதம் இது. கடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் அவர் சதம் அடித்திருந்தார். சுப்மன் கில் 72 ரன்களும் விஹாரி 69 ரன்களும் தீபக் ஹூடா 33 ரன்களும் எடுத்தனர்.  

310 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணி, 41.3 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன் மூலம் 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய ஏ அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணியிடம் தோற்றதற்கு பழி வாங்கிக்கொண்டது. 

இங்கிலாந்து லயன்ஸ் அணியின் டாவ்சன் அதிகப்பட்சமாக 38 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டும், அஹமது 2 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா, குணால் பாண்ட்யா, கிருஷ்ணப்பா கவுதம்ம், ஹூடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close