[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

ஊருக்கு மூட்டைக் கட்டிய நடப்பு சாம்பியன் ! ஜெர்மனியின் பரிதாபம்

germany-crashes-out-of-world-cup-with-a-loss-to-south-korea

2014 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்தாட்ட சாம்பியன் அணி ஜெர்மனி. ஆனால், இந்த உலக் கோப்பையில் தென் கொரியாவிடம் தோல்வியடைந்த லீக் சுற்றிலேயே வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதில் மிக முக்கியமான விஷயம் கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் ஜெர்மனி முதல் சுற்றோடு வெளியேறுவது இதுவே முதல் முறை. 


உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிப் பெறும் மிக முக்கியமான போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தென் கொரியாவிடம் 2க்கு 0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி தோல்வியை தழுவியது. அத்துடன், எஃப்' பிரிவில் 3 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்தது, உலக கால்பந்தாட்ட ரசிகர்களை சோகத்தில் ஆழத்தியுள்ளது ஜெர்மனி.

கஸான் அரினா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டம் ஆரம்பம் முதலே மிகவும் விறுவிறுவென சென்றது. இரு அணிகளும் போட்டியின் முழு நேரம் வரையிலும் கோல் அடிக்கவில்லை. இதன் பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் தென் கொரியா முழு பலத்துடன் மோதி 2 கோல்களை அடித்தது. 


உலகக் கோப்பை வரலாற்றில், நடப்பு சாம்பியன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியாமல் போவது இது 6-ஆவது முறையாகும். நடப்பு சாம்பியன்கள் அடுத்த உலகக் கோப்பையில் பரிதாபமாக தோற்பது இந்தாண்டும் தொடர்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close