[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

ஐபிஎல் கிரிக்கெட்: புள்ளிகள் பட்டியலில் குஜராத் முதலிடம்

ipl-cricket-dinesh-karthik-bowlers-help-gujarat-lions-go-top

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் லயன்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது.

ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, தொடக்கத்தில் விக்கெட்களை இழந்து தடுமாறியது. பின்னர் ஆல்ரவுண்டர்‌கள்‌ சகித் அல் ஹசன், யூசுப் பதான் ஆகியோர் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

20 ஓவர்கள் முடிவில், கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. சகித் அல் ஹசன் 66 ரன்களும், யூசுப் பதான் 63 ரன்களும் எடுத்தனர்.

159 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி, சீரான வேகத்தில் ரன் சேர்த்தது. அந்த அணி, 5 விக்கெட்களை இழந்த நிலையில் 18-ஆவது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. குஜராத் அணியில், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 51 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close