[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

கிரிக்கெட் வீரர்களுக்கு இன்று யோ -யோ டெஸ்ட்!

it-is-yo-yo-time-again-for-the-indian-players

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு ’யோ - யோ’ உடற்தகுதி தேர்வு பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இன்றும் நாளையும் நடக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி, ஜூலை மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட இருக்கிறது. அங்கு மூன்று டி20 தொடர், மூன்று ஒரு நாள் போட்டி, 5 டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் பங்கேற்கிறது. ஜூலை 3-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 11-ம் தேதி வரை அங்கு விளையாடுகிறது. அதற்கு முன்பாக, அயர்லாந்து அணியுடன் இரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணி விளையாடுகிறது. ஜூன் 27 மற்றும் 29-ம் தேதிகளில் இந்தப் போட்டி நடக்கிறது.

டி20, ஒரு நாள் தொடர், டெஸ்ட் தொடர் ஆகியவற்றுக்குத் தனித்தனியாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்திய ’ஏ’ அணிக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முன்னணி வீரர்கள் தவிர ஏராளமான இளம் வீரர்களும் இதில் இருக்கிறார்கள்.

இதற்கிடையே வரும் 14-ம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோதுகிறது. இதற்கு ரஹானே கேப்டனா க செயல்படுகிறார். இந்நிலையில் அனைத்து வீரர்களுக்கும் யோ யோ உடல் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்வு பெற்றால் மட்டு மே அணியில் இடம்பெற முடியும்.

டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இன்றும் நாளையும் யோ-யோ உடல் தகுதி தேர்வு நடைபெறுகிறது. ஒரு நாள் போட்டி, டி20 போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு வரும் 15-ம் தேதி முதல் இந்த உடல் தகுதி தேர்வு நடைபெறுகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close