[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

இது விசித்திரமான போட்டி: வெளியேறிய விராத் விரக்தி!

virat-kohli-slams-middle-order-failure-after-rcb-crash-out

’எங்கள் அணியின் மிடில் ஆர்டரை வலுப்படுத்த நினைத்தோம். அது நடக்காததால் தோற்றோம்’ என்று பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோலி கூறினார். 

ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. 

இந்தப்போட்டியின் முடிவை அடுத்து, பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ராகுல் திரிபாதி 58 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரஹானே 33 ரன்களும் கிளாசன் 32 ரன்களும் எடுத்தனர். பெங்களூர் தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 53 ரன்கள் எடுத்தார். பார்த்திவ் பட்டேல் 33 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்த ஆட்டமிழந்தனர். ராஜஸ்தான் அணியின் ஷ்ரேயாஸ் கோபால் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

தோல்விக்குப் பின் பேசிய கேப்டன் விராத் கோலி, ’இந்தப் போட்டி விசித்திரமாக இருந்தது. ஒரு விக்கெட்டுக்கு 75 ரன்கள் என்று நல்ல நிலையில்தான் இருந்தோம். ஆனால், அடுத்தடுத்து சுருண்டுவிட்டோம். இது ஏமாற்றமாக இருந்தது. நாங்கள் சிறப்பாக ஆட்டத்தை முடிக்கவில்லை. டிவில்லியர்ஸ் அருமையாக ஆடினார். பவுண்டரியும் சிக்சருமாக விளாசினார். ஆனால் அவருக்கு மற்ற வீரர்கள் ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை. 5,6 வீரர்கள் தவறான ஷாட்களை தேர்வு செய்து ஆடிவிட்டார்கள்.

எங்கள் அணியின் மிடில் ஆர்டரை வலுப்படுத்த நினைத்தோம். அது நடக்கவில்லை. எங்களின் பலம் இது இல்லை. நாங்கள் சரியாக செயல்பட வில்லை. இந்தத் தொடரில் சில புதிய வீரர்கள் நன்றாக செயல்பட்டார்கள். புதிய பந்தில் உமேஷ் யாதவ் சிறப்பாக வீசினார். சேஹல், சிராஜ், மொயின் அலி ஆகியோரின் பங்களிப்பும் சிறப்பாக அமைந்தது. இதன் மூலம் பாசிட்டிவான விஷயங்களை எடுத்துக்கொண்டு அடுத்தத் தொட ரில் வலுவாக திரும்பி வருவோம். பிளே ஆப் செல்லும் மற்ற அணிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close