[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு

இது ‘வின்டேஜ் தோனி’ - தெறிக்கவிட்ட மகி ! மிரண்ட ரசிகர்கள்

ipl-2018-the-return-of-classic-csk-and-vintage-dhoni

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தோனி பல்வேறு வகையில் ரசிகர்களை மிரள வைத்துவிட்டார். 

கிரிக்கெட்டை பொறுத்தவரை ஒவ்வொரு வீரருக்கும் பேட்டிங்கில் ஒவ்வொரு விதமான மைனஸ் இருக்கும். ஒரு சிலர் பந்துவீச்சில் தொடர்ச்சியாக ஆட்டமிழப்பார்கள். இல்லையெனில் ரன் சேர்க்க திணருவார்கள். ரெய்னாவை பொறுத்தவரை கொஞ்சம் எக்ஸ்ட்ரா பவுண்சர் போட்டால், அடிக்க முற்பட்டு எளிதில் கேட்ச் ஆகிவிடுவார். பலரும் தங்களது அனுபத்தின் மூலம் அடுத்தடுத்த போட்டிகளில் சரி செய்துகொள்வார்கள். இதுபோன்ற விஷயங்களில் சச்சின் மிகவும் சாதுர்யமாக செயல்படுவார். சென்ற போட்டியில் யாருடைய பந்துவீச்சில் எப்படி ஆட்டமிழந்தோம் என்ற அனுபவத்தை மிகவும் துள்ளியமாக கணித்து அடுத்தடுத்த போட்டிகளில் புதிய யுக்தியை கையாண்டு அசத்துவார் சச்சின். 

அப்படிவொரு நுட்பமான எதிர்வினையைத் தான் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தோனி நிகழ்த்தியுள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நூலிழையில் தோல்வியடைந்தது. அந்தப் போட்டியில் தோனி 44 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த போதும் இலக்கை வெற்றிகரமாக எட்ட முடியவில்லை. அதற்கு காரணம் கடைசி ஓவரை வீசிய மோகித் சர்மா மிகவும் கச்சிதமாக வீசி தோனியை சற்றே திணறடித்தார். அதாவது மோகித், ஆஃப் சைடில் யார்க்கராக பந்தினை தொடர்ச்சியாக வீச அதனை தோனியால் ரன்களாக மாற்ற முடியவில்லை. தொடர்ச்சியாக 5 பந்துகளை ஆஃப் சைடு யார்க்கராக மோகித் வீசினார். அதில் மூன்று பந்துகள் டாட் பந்துகள். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தோனியும், பிராவோவும் களத்தில் இருந்தும் 12 ரன்கள் மட்டுமே எடுத்தனர். 

   

அதேபோல், நேற்று நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. கோரி ஆண்டர்சன் அந்த ஓவரை வீசினார். முதல் பந்தில் பவுண்டரியும், இரண்டாவது பந்தில் சிக்ஸரும் விளாசிய பிராவோ 3வது பந்தில் சிங்கிள் அடித்தார். கடைசி 3 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. பந்து தனக்கு எப்படி வீசப்படும் என்று தோனி கணித்துவிட்டார். பந்து போடுவதற்கு முன்பாகவே ஆஃப் சைடில் முழுவதுமாக நகர்ந்து விட்டார். அவர் கணித்தது போல் பந்து ஆஃப் சைடு லைனில் வந்தது. வந்த வேகத்தில் பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார் தோனி. இதுதான் தோனியின் அனுபவம். அதேபோல், இந்தப் போட்டியில், சுழற்பந்து வீச்சை நன்றாக அடித்து ஆடினார். சுழற்பந்து வீச்சில் அடிக்க முடியாமல் திணறி வருகிறார் என்ற விமர்சனத்திற்கும் இதன் மூலம் தோனி பதிலடி கொடுத்தார். 

           

இந்திய அணியில் சமீப காலமாக தோனி மீது ஒரு விமர்சனம் இருந்து வந்தது. தோனி மிகவும் பொறுமையாக விளையாடுகிறார் என்பது தான் அது. ரன்களை குவிக்க திணறுகிறார். பழைய பினிஷிங் தோனி இப்பொழுது இல்லை என்று வீரர்களே நேரடியாக விமர்சித்தனர். அதில் சிறிது உண்மையும் இருந்தது. கேப்டனாக இருக்கும் போதும், விக்கெட் விழுந்து விட்ட பிறகு நெருக்கடியான நேரத்தில் தான் தோனி களமிறங்குவார். ஆனால், அதிரடியை குறைக்காமல் விளையாடி போட்டியை முடித்து வைப்பார். 4 அல்லது 5 விக்கெட் இழந்த பிறகு ஒரு பேட்ஸ்மேன் இப்படி விளையாட முடியுமா என்னும் அளவிற்கு பல போட்டிகளில் தோனி அசத்தியுள்ளார். அதற்கு இலங்கை அணிக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டி சிறந்த உதாரணம். அப்படி ஒரு தோனியை தான் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் காண முடிந்தது. அதனால், நேற்றைய போட்டியின் போது வின்டேஜ் தோனி என்று பலரும் புகழ்ந்தார்கள். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close