[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

சென்னை அணி ரன் குவிப்பு; சதம் விளாசிய வாட்சன் 

shane-watson-was-dropped-twice-and-he-made-royals-pay-for-it

ஐபிஎல் தொடரின் 17-வது ஆட்டம் புனேவில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரகானே பவுலிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் முரளி விஜய், ஹர்பஜன் நீக்கபட்டு காயத்தில் இருந்து மீண்ட ரெய்னா, கரண் சர்மா இருவரும் அணியில் சேர்க்கபட்டனர். ராஜஸ்தான் அணியில் ஷார்ட் மற்றும் குல்கர்னி நீக்கப்பட்டு கிளாசான், பின்னி வாய்ப்பு பெற்றுள்ளனர்.

 சென்னை அணியின் தொடக்க வீரராக வாட்சன் மற்றும் அம்பதி ராயுடு களம் இறங்கினர். ராயுடு 8 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, காயத்தில் இருந்து மீண்ட ரெய்னா அடுத்து களம் இறங்கினார். தொடக்கம் முதலே அதிரடியில் மிரட்டினார். வாட்சன் மற்றும் ரெய்னா ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை மைதானம் முழுவதும் சிதறடித்தனர்.

சிறப்பாக விளையாடி வந்த  ரெய்னா 29 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சென்னை அணி 13 ஓவரிலே 150 ரன்கள் சேர்க்க தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வாட்சன் தனது சதத்தை பதிவு செய்தார். 57 பந்துகளில் 106 ரன்கள் சேர்த்து வாட்சன் ஆட்டமிழந்தார். அதில் 6 சிக்சர்களும், 9 பவுண்டர்களும் அடங்கும். இறுதி கட்டத்தில் பிராவோவும் அதிரடிகாட்ட சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் சார்பில் எஸ். கோபால் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Shane WatsonRainaCskRR
Advertisement:
Advertisement:
[X] Close