[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

சிஎஸ்கே வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு

heavy-protection-for-chennai-super-kings-players

சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சென்னை வந்துள்ளனர். அவர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருவதால் ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் சென்னையில் போட்டிகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால் கேரளாவில் போட்டிகளை நடத்தலாம் என பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது. கேரளாவில் போட்டியை நடத்திக்கொள்ளலாமா என பிசிசிஐ தரப்பில் கேட்டதாக தெரிவித்துள்ள அம்மாநில கிரிக்கெட் சங்கம், போட்டிகளை நடத்த தயாராக இருப்பதாக பதிலளித்துள்ளதாகவும் கூறியுள்ளது. எனினும் இதுவரை போட்டிகள் இடமாற்றம் செய்யப்படவில்லை என்றும் கேரள கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. 

ஐபிஎல் போட்டிகள் அறிவிக்கப்பட்டபடி சென்னையில் நடைபெறும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் சென்னையில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சென்னை வந்து சேர்ந்தனர். அவர்கள் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த விடுதிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close