[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

ஐசிசி புதிய பட்டியலில் கோலி, டிவில்லியர்ஸின் இடம் என்ன?

icc-new-team-rankings-players

புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் மார்க்ராம் உட்பட பல வீரர்கள் டாப் பத்து இடத்திற்குள் நுழைந்துள்ளனர்.
  
ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா இடையில் நடந்த நான்கு டெஸ்ட் கொண்ட தொடர் நேற்று உடன் முடிந்த நிலையில் ஐசிசி புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா அணியின் முன்னால் கேப்டன் ஸ்மித் 929 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், கோலி 912 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ரூட் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். வில்லியம்சன் மற்றும் வார்னர் நான்கு மற்றும் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலியா உடன் நடந்த டெஸ்ட்டியில் சிறப்பாக செயல்பட்ட டிவில்லியர்ஸ் ஆறாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்தியாவை சேர்ந்த புஜாரா 810 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளார். அதே போல்  ஆஸ்திரேலியா தொடர் முழுவதிலுமே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய தென்ஆப்பிரிக்கா தொடக்க வீரர் மார்க்ராம் முதன்முறையாக பத்து இடத்திற்குள் முன்னேறி ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.

பந்து வீச்சாளர்கள் பட்டியளில் தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 897 முள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் ஆண்டர்சன் இரண்டாம் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் வேகபந்து வீச்சாளர் பிலாண்டர்  மூன்றாவது இடத்திற்கும் முன்னேறியுள்ளார். இரண்டாம் இடத்தில் இருந்த இந்தியாவின் ஜடேஜா நான்காவது இடத்திற்கு தள்ளபட்டுள்ளார். அதே போல் மற்றொரு சுழல் பந்து வீச்சாளரான அஷ்வின் ஐந்தாவது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா தொடருடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற தென் ஆப்பிரிக்காவின் வேக பந்துவீச்சாளர் மோர்கல் ஏழாவது இடத்திலும் உள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close