[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

ஹெராத், தனஞ்செயா சுழலில் சுருண்டது பங்களாதேஷ்

dananjaya-takes-five-as-sri-lanka-clinch-series

இலங்கை கிரிக்கெட் அணி, பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி, டிராவில் முடிந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்காவில் நடந்து வந்தது. 

முதலில் பேட் செய்த இலங்கை அணி 222 ரன்னில் ஆல் அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய, பங்களாதேஷ் 110 ரன்னில் சுருண்டது. அந்த அணி கடைசி 3 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து 2 வது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணி, 226 ரன்கள் எடுத்தது. வெற்றி பெற 339 ரன் தேவை என்ற நிலையில் பேட்டிங்கை தொடங்கிய பங்களாதேஷ், இலங்கையின் ஹெராத், தனஞ்செயா ஆகியோரின் சுழல் பந்துவீச்சில் மடமடவென விக்கெட்டுகளை இழந்து, 123 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் மொமினுல் ஹக் அதிகப்பட்சமாக, 33 ரன் எடுத்தார். இலங்கை தரப்பில் தனஞ்செயா 5 விக்கெட்டும் ஹெராத் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். பெரேரா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 

இதையடுத்து 1-0 என்ற கணக்கில், தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close