[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு

ஆஸி. ஜூனியர் டீமை வழி நடத்திய பஞ்சாப் சிங்!

punjabi-origin-jason-jaskirat-singh-to-lead-australia

ஆஸ்திரேலிய ஜூனியர் கிரிக்கெட் டீம் கேப்டன் ஜேசன் சங்கா, இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தில் நடந்தது வந்தது. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதின. இதில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதையடுத்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஜேசன் சங்கா, இந்திய அணியை ஏகத்துக்கும் பாராட்டி இருக்கிறார்.

‘இந்தப் போட்டியில் இந்திய அணியிடம் இருந்து தனிப்பட்ட முறையில் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். இந்திய வீரர்களின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. சுப்மன் கில், பிருத்வி ஷா போன்றவர்கள் பந்தை மைதானத்தில் நாலாபுறமும் சிதறடித்ததை ரசித்தேன். அவர்களின் பேட்டிங் ஸ்டைலில் இருந்து கற்றுக்கொண்டேன். நாங்கள் சில தவறுகளை செய்திருந்தாலும் அதைப் பெரிதாக நினைக்கவில்லை. எங்கள் அணியினரும் சிறப்பாகவே போராடினார்கள்’ என்றார் சங்கா.

இவர் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர். முழுப்பெயர், ஜேசன் ஜாஸ்கிரத் சிங் சங்கா.  அப்பா குல்தீப் சங்கா, பஞ்சாப் மாநிலம் படிண்டாவைச் சேர்ந்தவர். மாநில அளவிலான தடகள வீரர். படிப்புக்காக 80- களில் ஆஸ்திரேலியா சென்றவர் அங்கேயே செட்டிலாகிவிட்டார். இவர், நியூ கேஸில் பகுதியில் ’ராஜ் கார்னர்’ என்ற பெயரில் சில ரெஸ்டாரன்ட்களை நடத்தி வருகிறார். இதே டீமில் ஆடிய இன்னொரு வீரர் பரம் உப்பல், சண்டிகரில் பிறந்தவர்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close