[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எனக்கு உற்சாக வரவேற்பளித்த சகோதர, சதோதரிகளின் துக்கத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறேன்-கமல்ஹாசன்
  • BREAKING-NEWS பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 5584 அரசுப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன
  • BREAKING-NEWS பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜுன் 28 ஆம் தேதி மறுதேர்வு எழுதலாம்
  • BREAKING-NEWS சிவகங்கை, ஈரோடு, விருதுநகர் மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன
  • BREAKING-NEWS பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது
  • BREAKING-NEWS போராட்டம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்- டிஜிபி ராஜேந்திரன்
  • BREAKING-NEWS வனத்துறையின் விழிப்புணர்வு எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் குரங்கணிக்கு ட்ரெக்கிங் சென்றனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா இந்திய அணி

india-camp-ahead-of-the-third-and-final-test-against-south-africa

இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்குகிறது. 

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. கடந்த ஆண்டில் ஆசிய துணைக்கண்டத்தில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் தடுமாறி வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தினர். ஆனால் 300 ரன்களுக்கும் குறைவான இலக்கை எட்டிப்பிடிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். இந்தியாவின் டாப் ஆர்டர் அப்படியே சரிந்தது. இதுவரை இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் ஒரு சதம், ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளனர். இந்தத் தொடரில் கேப்டன் கோலி சில இடங்களில் தடுமாறினார். புதிய பந்துகளை தேர்வு செய்வது, அட்டாக்கிங் பந்துவீச்சை கொண்டு செல்வது போன்ற முடிவுகள் எடுப்பதில் தடுமாறினார். 

இந்திய பந்துவீச்சாளர்கள் இரு டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 40 விக்கெட்டுகளையும் வீழ்த்திவிட்டனர். ரன்களையும் கட்டுப்படுத்திவிட்டனர் இதற்கு மேல் அவர்களிடம் எதிர்பார்க்கமுடியாது. இந்தத்தொடரில் ரஹேனே சேர்க்கப்படாதது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.அதேபோல் இரண்டாவது போட்டியில் புவனேஸ்வர்குமாரை ஓரங்கட்டியதும் பெரிதாக விமர்சிக்கப்பட்டது. ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால் ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என கோலி கூறிய விளக்கமும் விமர்சனத்திற்குள்ளானது. இரண்டாவது டெஸ்ட் போட்டி தோல்விக்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் கோலி கடுகடுத்தார். தோல்வி அணித்தேர்வு குறித்த செய்தியாளர்களின் தோல்விக்கு பதிலளித்த சிறந்த அணியை தேர்வு செய்து கொடுங்கள் விளையாடுகிறோம் என்றார். 

இதற்கிடையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, செய்தியாளர்களிடம் பேசும்போது, 2-வது டெஸ்ட் போட்டியில் நமது வீரர்கள் சிலர் ரன் அவுட் ஆன முறை பள்ளி சிறுவர்கள் செய்வது போல இருந்தது. இது வேதனை அளிக்கிறது என்றார். 

இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்துவிட்ட இந்திய அணி ஆறுதல் வெற்றிபெறும் நோக்கில் களமிறங்குகிறது. இந்திய அணியில் ரோகித் ஷர்மாவுக்குப் பதில் ரஹானே சேர்க்கப்படுவார் எனத் தெரிகிறது. வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் மீண்டும் அணிக்கு திரும்ப அதிக வாய்ப்புள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close