[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமார் தேர்வு
  • BREAKING-NEWS பி.இ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 2 வரை அவகாசம் நீட்டிப்பு- அண்ணா பல்கலைக்கழகம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியை தவிர்த்த மற்ற 2 மாவட்டங்களில் இன்டர்நெட் சேவையை முடக்கியது ஏன்?- உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் முதலமைச்சர் குமாரசாமி
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: மதுராந்தகம் அருகே புதுமண தம்பதியுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சாலை மறியல்
  • BREAKING-NEWS தமிழக- கேரள எல்லையான களியக்காவிளையில் கேரள அரசுப்பேருந்துகள் நிறுத்தம்
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும்- தமிழக அரசு

நடிகர் ரஜினிகாந்தை சந்திக்கிறார் தோனி ?

ms-dhoni-to-meet-rajinikanth-today

சென்னையில்  நடிகர் ரஜினிகாந்த்தை இந்திய கிரிக்கெட் அணி வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனுடமான எம்.எஸ்.தோனி சந்தித்துப் பேச இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை வந்துள்ள எம்.எஸ்.தோனி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை எனது இரண்டாவது வீடு போன்றது. 
சென்னை அணிக்கு நான் தேர்வு செய்யப்பட்டதை பெருமையாக நினைக்கிறேன். ரசிகர்கள் அனைவருமே எப்போது சென்னை அணி திரும்பும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். எப்போதுமே சென்னை எனக்கு, தனி சிறப்பு வாய்ந்தது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்குதான் அதிக ஸ்கோரை நான் பதிவு செய்தேன். சென்னை அணியின் சிறப்பே, அனைத்து வீரர்களும் தங்களது முழுத் திறமையை வெளிப்படுத்தும் சூழல் இங்கு எப்போதும் இருக்கும் என்பதுதான்.. கிரிக்கெட்டில் ஏற்ற இறக்கம் இருக்கத்தான் செய்யும். கடினமான தருணங்களை சிறப்பாக எதிர்கொண்டுள்ளோம்.
 
நான் விக்கெட் கீப்பராக இருபது அணியை வழிநடத்த உதவும். தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை ஏலத்தில் எடுக்க இருக்கிறோம்.  2 வருடங்கள் சென்னை அணிக்காக விளையாட முடியாதது வருத்தம் அளித்தாலும் நிறைய விஷயங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது. 
இரண்டு வருடம் விளையாடா விட்டாலும் ரசிகர்களின் வரவேற்பு அதிகரித்திருக்கிறது. அணியில் 18-ல் இருந்து 20 வீரர்களை தேர்வு செய்ய இருக்கிறோம்.

இவ்வாறு தோனி கூறினார்.

இன்று மாலை நடிகர் ரஜினிகாந்தை தோனி, சந்தித்துப் பேச இருப்பதாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close