[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது
  • BREAKING-NEWS இந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS விருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

பெண்களிடம் அநாகரிகம்: இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரர் மீது குற்றம் நிரூபணம்

derbyshire-cricketer-shiv-thakor-found-guilty-of-exposure-charges

பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக, இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரர் ஷிவ் தாகூர் மீது கூறப்பட்ட புகார் நிரூபணமானதாக இங்கிலாந்து நீதிமன்றம் கூறியுள்ளது.

இங்கிலாந்தின் டெர்பிஷையர் அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருபவர் ஷிவ் தாகூர். வேகப்பந்துவீச்சாளரான இவர், 19 வயதுக்குட்பட்டோருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக 2013-ல் நியமிக்கப்பட்டிருந்தார்.
கடந்த ஜூன் 12 மற்றும் 19-ம் தேதிகளில் டெர்பி நகரில் இரண்டு பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக இவர் மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்டார். இந்தப் புகாரை அடுத்து அவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். 

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த தாகூர், தனது காதலியுடன் பாலியல் ரீதியாக தான் மகிழ்வாக இருப்பதாகவும் அதனால் அநாகரிகமான செயல்களில் ஈடுபட வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்று கூறிவந்தார். 

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த தெற்கு டெர்பிஷையர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், குற்றம் நிரூபணமானதாக நேற்று தீர்ப்புக் கூறியது. பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close