[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை

3-வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்துக்கு எதிராக சதம் அடித்தார் ரோகித் சர்மா

india-vs-new-zealand-3rd-odi-india-ride-on-rohits-ton-kohlis-fifty

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா சதம் அடித்தார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் தலா ஒருபோட்டியில் வெற்றி பெற்றுள்ளதாக இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை கைப்பற்றும். இந்த நிலையில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதனையடுத்து இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஷிகர் தவான் 14 ரன்களில் நடையை கட்ட, ரோகித் உடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தனர். ரோகித் சர்மா 52 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்திய அணி 18.4 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. விராட் கோலி 59 பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 106 பந்துகளில் சதம் அடித்தார். ஒருநாள் போட்டிகளில் இது அவருக்கு 15-வது சதம் ஆகும். இந்த ஆண்டில் அவர் அடிக்கும் 5-வது சதம். இந்திய அணி 36 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close