[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை

’குல்தீப், சாஹல் மனசு கஷ்டப்படுமே..!’

it-would-hurt-kuldeep-chahal-s-confidence

ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட குல்தீப், சாஹலை நீக்கினால் அவர்கள் மனசு கஷ்டப்படும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் ஒரு நாள் தொடரில் சேர்க்கப்படவில்லை. டெஸ்ட் தொடரில் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். 

இதுபற்றி தேர்வுக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘அஸ்வின், ஜடேஜா இருவரும் நீக்கப்படவில்லை. இருவருமே சிறப்பான பந்துவீச்சாளர்கள். இந்திய அணிக்கு அவர்கள் பங்களிப்பை மறந்துவிடமுடியாது. அவர்கள் சுழற்சி முறையில் சேர்க்கப்படுவார்கள். எதிர்கால நலனை கருத்தில் கொண்டே, குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் இருவரும் சிறப்பாகச் செயல்பட்டார்கள். இந்த நேரத்தில் குல்தீப், சாஹலை உட்கார வைத்துவிட்டு அஸ்வின், ஜடேஜாவுக்கு வாய்ப்புக் கொடுத்தால், அது அவர்களின் நம்பிக்கையை குலைத்துவிடும். மனசு கஷ்டப்படும். அதோடு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் தேர்வுக்குழுவினரின் கவனத்தில் இருக்கிறார். அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் டெஸ்ட்டுக்கு அழைக்கப்படுவார்’ என்றார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close