[X] Close
JUST IN
 • BREAKING-NEWS காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி உத்தரப்பிரதேசத்தில் இருந்து ரயில் மூலம் துணை ராணுவப்படையினர் சென்ட்ரல் வந்தனர்
 • BREAKING-NEWS காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வாகியிருப்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது - தமிழிசை
 • BREAKING-NEWS மத்திய பாஜக ஆட்சியை அகற்றுவதற்கு ராகுல் காந்தியே சிறந்த மாற்றுத் தலைவர் - திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 • BREAKING-NEWS குஜராத் தேர்தலில் எல்லைமீறி பாஜக பரப்புரை செய்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்
 • BREAKING-NEWS மீனவர்கள் மீட்காததை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் நாளை போராட்டம்- ஸ்டாலின்
 • BREAKING-NEWS தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
 • BREAKING-NEWS வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,815 கனஅடியில் இருந்து 2,375 கன அடியாக குறைந்தது
 • BREAKING-NEWS காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி நாகையில் கடலில் இறங்கி பெண்கள் போராட்டம்
 • BREAKING-NEWS இலங்கைக்கு படகில் கடத்தப்படவிருந்த ரூ.75 லட்சம் கஞ்சா ராமேஸ்வரம் அருகே பறிமுதல்
 • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர்: பாரமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
 • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் தொடரில் வெண்கலம் வென்றது இந்திய அணி
விளையாட்டு 08 Oct, 2017 08:21 AM

டக்வொர்த்-லீவிஸ் விதிமுறை புரியலை: கோலி!

we-don-t-understand-the-duckworth-lewis-method-kohli

எங்களுக்கு உண்மையிலேயே டக்வொர்த்-லீவிஸ் விதிமுறை புரியவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி கூறினார்.

இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதிய முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நேற்றிரவு நடந்தது. இதில் இந்திய அணி வெற்றிபெற்றது. 
பின்னர் இந்திய கேப்டன் விராத் கோலி கூறும்போது, ‘டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது சரியான முடிவு. எங்களுக்கு உண்மையிலேயே டக்வொர்த்-லீவிஸ் முறை புரியவில்லை. ஆஸ்திரேலிய அணியை 118 ரன்களுக்குள் நாங்கள் கட்டுப்படுத்திவிட்டோம். இதனால் 6 ஓவர்களில் 40 ரன்களுக்குள் எடுக்க வேண்டியிருக்கும் என நினைத்தோம். ஆனால், 48 ரன்களை இலக்கு நிர்ணயித்தார்கள். இது தந்திரமானது. இது எப்படி என்றே தெரியவில்லை. இந்த வெற்றிக்கு அனைத்து வீரர்களுமே காரணம். எல்லோரும் ஒன்றிணைந்து இந்த வெற்றியை பெற்றுள்ளோம்.  பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். ஒரு போட்டியில் ரன்களை வாரி வழங்கினால், அடுத்தப் போட்டியில் அதைக் கட்டுப்படுத்தி விடுகிறார்கள்.  பல போட்டிகளில் விளையாடாமல் இருந்த தவான், அணிக்கு திரும்பி இருப்பது பலம்’ என்றார். 

தோல்விக்கு பிறகு பேசிய ஆஸ்திரேலிய அணியின் பொறுப்பு கேப்டன் டேவிட் வார்னர், ‘இந்தப் போட்டியிலும் தோற்றுவிட்டோம். அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடுவோம் என நம்புகிறேன். 120 ரன்களுக்கு கிட்டதட்ட அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டோம். இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். தோல்வி பற்றி கேட்கும் உங்கள் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. மிடில் ஆர்டரில் நாங்கள் மீண்டும் சொதப்பிவிட்டோம்’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close