[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

உலகக்கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற்றம்: 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

australia-defeat-pakistan-by-21-runs

இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆண்கள் பிரிவில் பாகிஸ்தான் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, ஆஸ்திரேலிய அணி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியது. மொஹாலியில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 61 ரன்களும், ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் 44 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக காலித் லத்தீப் 46 ரன்களும், சோயப் மாலிக் 40 ரன்களும் எடுத்தனர். இந்த போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பால்க்னர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close