[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

உலக கோப்பை டி20: ‌பாகிஸ்தான் -ஆஸ்திரேலியா இன்று மோதல்: யாருக்கு அரையிறுதி வாய்ப்பு....ஒரு பார்வை

icc-t20-world-cup-2016-do-or-die-for-pakistan-against-australia-in-mohali

இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆண்கள் பிரிவில் இன்று நடைபெறும் போட்டியில் விளையாடவுள்ள ஆஸ்திரேலியா மற்றும்‌ பாகிஸ்தான் அணிகள், அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு உள்ள வாய்ப்புகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

சாகித் அப்ரிதி தலைமையிலான பாகிஸ்தான் அணி , பங்களாதேஷை தோற்கடித்து நடப்பு 20 ஓவர் உலகக்கோப்பை‌ கிரிக்கெட் தொடரில் வெற்றிக் கணக்கைத் தொடங்கியது. இரண்டாவது போட்டியில் இந்தியாவிடமும், மூன்றாவது போட்டியில் நியூசிலாந்திடமும் தோல்வி கண்டதால் பாகிஸ்தான் அணி நெருக்கடிக்கு உள்ளானது.

இரண்டு போட்டிகளில் தோல்வி கண்டபோதிலும் பாகிஸ்தான் அணி ரன்ரேட்டில் நியூசிலாந்திற்கு அடுத்த இடத்தில் இருப்‌பதால் அரையிறுதிக்கு முன்னேற மிகச் சிறிய அளவிலான வாய்ப்பு இன்னும் உள்ளது. ஆஸ்திரேலியாவுடனான இன்றைய ஆட்டத்தில் மிகப் பெரிய வெற்றி பெறுவதுடன், கடைசி ஆட்டத்தில் ‌இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைய வாய்ப்பு இருக்கிறது.

ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் ‌அணியுடனான போட்டியில் போராடி வெற்றி பெற்று, அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைத்தது.

இன்று நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறிவிடும். கடைசியாக நடைபெறும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி, B பிரிவில் இருந்து நியூசிலாந்துக்கு அடுத்தபடியாக அரையிறு‌திக்கு முன்னேறும். அரையிறுதிக்கு தகுதி பெறும் அணியை தீர்மானிக்கக்கூடிய இன்றைய போட்டி ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்‌ளது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close