[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

தவறான சுவிட்சை அழுத்திய மூன்றாவது நடுவர்... ஆஸி-பாக். டெஸ்ட் போட்டியில் அதிர்ச்சி

australia-vs-pakistan-third-umpire-mistakenly-gives-azhar-ali-out-on-93-watch-video

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் பாகிஸ்தான் வீரர் அசார் அலிக்கு மூன்றாவது நடுவர் தவறான சுவிட்சை அழுத்தி அவுட் என அறிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மெல்போர்ன் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியின் முதல் நாள் ஸ்கோரான 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் என்பதோடு பாகிஸ்தான் அணியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை அசார் அலி மற்றும் ஆசாத் சபீக் ஆகியோர் தொடர்ந்தனர்.

இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்கு 107 ரன்கள் குவித்து பாகிஸ்தான் இன்னிங்ஸை சரிவிலிருந்து மீட்டனர். அசார் அலி 93 ரன்கள் எடுத்திருந்த போது ஆசாத் சபீக் அடித்த பந்துவீச்சாளர் ஜேக்சன் பேர்டின் கையில் பட்டு ஸ்டம்புகளைத் தகர்த்தது. டிவி ரீ-ப்ளேயில் அசார் அலி கிரீஸுக்குள் வந்திருப்பது தெளிவாகத் தெரிந்தது. அவுட் இல்லை என்பதை வீரர்கள் மட்டுமல்லாது ரசிகர்களும் உறுதி செய்திருந்தநிலையில், மூன்றாவது நடுவராகப் பணியாற்றிய எஸ்.ரவி, அவுட் அறிவிப்பதற்கான சுவிட்சை தவறாக அழுத்தினார்.

இதனால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கிய நிலையில், தனது தவறை உணர்ந்த நடுவர் உடனடியாக அவுட் இல்லை என்று அறிவித்தார். இந்த சம்பவத்தால் மைதானத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. முதல்நாளைப் போலவே இரண்டாவது நாளிலும் மழை குறுக்கிடவே ஆட்டம் முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது. 93 ரன்களில் அவுட் கண்டத்தில் இருந்து தப்பிய அசார் அலி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் சதத்தைப் பதிவு செய்ததுடன், 139 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close