[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்... இங்கிலாந்து 417 ரன்கள் முன்னிலை

at-stumps-on-day-2-of-the-5th-test-india-60-0-in-20-overs

சென்னை டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணியுடனான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 477 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. சென்னையில் நடைபெற்று வரும் போட்டியில், 4 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் என்ற முதல் நாள் ஸ்கோருடன் இங்கிலாந்து அணி இன்று ‌ஆட்டத்தை தொடர்ந்தது. பென் ஸ்டோஸ் 6 ரன்களிலும்‌, ஜோ பட்லர் 5 ரன்களிலும் வெளியேறினார். 120 ரன்களுடன் ஆட்டத்தை தொடர்ந்த மொயின் அலி 146 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். 8-வது விக்கெட்டுக்குப் பின் களமிறங்கிய டாவ்சன், ஆடில் ரஷீத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆளுக்கு அரைசதம் அடித்தனர்,

ஆடில் ரஷீத் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், டாவ்சன் ஆட்டமிழக்காமல் 66 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதன்பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி நிதானமாக ரன்கள் சேர்த்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய வீரர்கள் பார்த்திவ் படேல் 28 ரன்களுடனும், ராகுல் 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போதைய நிலையில் இந்திய அணி இங்கிலாந்தை விட 417 ரன்கள் பின்தங்கியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close