[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு

england-test-match

இங்கிலாந்து உடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது.

எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழுவினர், இந்திய அணியின் வீரர்களை மும்பையில் தேர்வு செய்யவுள்ளனர். நியூசிலாந்து உடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி, முழுமையாகக் கைப்பற்றியதால், அந்தத் தொடரில் பங்கேற்க வீரர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது. காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் ஷர்மா, மீண்டும் அணிக்கு தேர்வு செய்யப்ப‌ட வாய்ப்புள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும், இங்கிலாந்து அணி இன்று இந்தியா வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் வரும் 9- ஆம் தேதி தொடங்குகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close