JUST IN
  • BREAKING-NEWS மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
  • BREAKING-NEWS என் நாடிநரம்பில் ஓடுவதெல்லாம் கண்ணதாசனின் வரிகள் : இளையராஜா
  • BREAKING-NEWS எதிர்ப்புகள் வந்தால்தான் அரசியலில் ரஜினியால் சிறந்து விளங்க முடியும்: குருமூர்த்தி
  • BREAKING-NEWS அசாம்: கவுகாத்தியில் ரூ.2கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS இந்தியிலும் பாஸ்போர்ட் என்பதை திரும்பப்பெற வேண்டும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஸ்டாலின் முதல்வராகிவிடுவார் என்ற பயத்தில் ரஜினியை முன்னெடுக்கிறது பாஜக : சீமான்
  • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய அணி
  • BREAKING-NEWS சசிகலா கூறியதால் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது: விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS மகாராஷ்ட்ராவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் கைதான 8 தமிழக மீனவர்களுக்கு ஜூலை 7 வரை காவல்
  • BREAKING-NEWS நீட் தேர்வால் குழப்பமான கல்வி சூழல் உருவாகியுள்ளது: பிரின்ஸ் கஜேந்திரபாபு
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா நிறைவேற்றம்
விளையாட்டு 25 Sep, 2016 05:35 PM

நியூசிலாந்து உடனான டெஸ்ட்: வெற்றியை எதிர்நோக்கும் இந்தியா!

Cinque Terre

நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றியை எதிர்நோக்கியுள்ளது.

கான்பூரில் நடைபெற்று வரும்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 318 ரன்களும், நியூசிலாந்து அணி 262 ரன்களும் எடுத்தன. பின்னர் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. முரளி விஜய் 76 ரன்களிலும், புஜாரா 78 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோலி 18 ரன்களும், ரஹானே 40 ரன்களும் எடுத்தனர். 6-வது விக்கெட்டுக்கு இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் ஷர்மா 68 ரன்களுடனும், ஜடேஜா 50 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து 434 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி அஷ்வினின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. நான்காம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. லியுக் ராங்கி 38 ரன்களும், சாண்ட்னர் 8 ரன்களும் எடுத்தனர்.

இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads