[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து
  • BREAKING-NEWS உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

வேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது ?அதிர்ச்சியின் உச்சத்தில் சமூகம் !

father-held-for-rape-of-14-year-old-daughter-in-coimbatore

ஒரு தந்தையின் தாய்மையை அவரின் மகளால் மட்டுமே உணர முடியும் என்பார்கள். இப்படியான எழுத்துகளை கடந்த நமக்கு இந்த சம்பவம் கசப்பாகவே அமையும். ஆம், கோவையில் ஒரு 14 வயது சிறுமியை பெற்ற தந்தையே 3 ஆண்டுகள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இச்சம்பவத்தில் மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில் சிறுமியை தனது தந்தையே வன்கொடுமை செய்தது இல்லாமல் சிறுமியின் 2 சித்தப்பாக்களும் ஈடுபட்டனர் என்பதும் இரட்டிப்பு வேதனை!

Read Also -> 'என்னை விட்டு பிரியும்போது அம்மா என அழுதாள்' கண் கலங்கிய ஹரிணியை வளர்த்த சங்கீதா! 

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை (35), சித்தப்பா (28) என இருவர் போக்சோ உள்பட 2 பிரிவுகளின் கீழ் கைது, மற்றொரு சித்தாப்பாவை (23) காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவை தெலுங்குபாளையத்தில் உள்ள அரசு உதவிப்பெரும் பள்ளியில் கெட்ட நோக்கத்துடன் தொடுதல் என்ற தலைப்பில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம் சார்பில் நடத்தப்பட்டது. அப்போது, நிகழ்ச்சியில் பங்கேற்ற 14 வயது சிறுமி மாவட்ட குழந்தைகள் மைய அதிகாரிகளிடம் தனக்கு கடந்த 3 ஆண்டுகளாக தந்தை, சித்தப்பா இருவர் என மூவர் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததை கூறியுள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் புகாரின் அடிப்படையில், தந்தை, சித்தப்பா என இருவரை கைது செய்த செல்வபுரம் போலீஸ், மேலும் ஒரு சித்தப்பாவை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் பராமரிப்பில் காப்பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நடந்தது என்ன?

2017ம் ஆண்டு ஒருநாள் அச்சிறுமி வேலைக்கு செல்லும் தனது தாயிடம் வயிற்று வலி என கூற, பதறிய தந்தை நானே சிறுமியை மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறேன் என கூறியுள்ளார். காரணம், எங்கே தாய் அழைத்துச் சென்றால் மகள் கருவுற்றிருந்தால் தெரிந்துவிடுமோ என்ற அச்சம். இவை எல்லாவற்றையும் பள்ளியில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறுமி அம்பலப்படுத்த, காவல்துறையில் புகாரளிக்கப்பட்டு சிறுமியின் தந்தை, சித்தப்பாவை கடந்த 5ம் தேதி இரவு போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான மற்றோரு சித்தப்பாவை தேடி வருகின்றனர்.

Read Also -> நெருங்கும் தேர்தல்! பத்திரிக்கை விளம்பரங்களின் கட்டணம் உயர்வு

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், குழந்தைகளுக்கு இதுபோன்ற விழிப்புணர்வு எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு என்பது மிக மிக அவசியம். இச்சம்பவத்தில் சிறுமியின் தாய் சரியாக கண்காணித்திருந்தால் இதை முன்கூட்டியே கண்டறிந்திருக்கலாம். படிக்காத பெற்றோர்களுக்கு மட்டுமின்றி படித்த பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஏனெனில், குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது, அவர்கள் கூறுவதை செவிசாய்த்து கேட்பது என இவை எல்லாம் நவீன காலத்தில் குறைந்து வருவது வேதனைக்குரியது. தங்கள் பிள்ளைகள் செல்போனில் அதிக நேரம் எதை பார்க்கின்றனர் என்பதை பெற்றோர்கள் அவசியம் கண்காணிக்க வேண்டும். மேலும், சமூக வலைத்தளங்களில் மிக எளிமையான வழியில் தேடி பார்க்கக்கூடிய ஆபாச படங்களும் இதற்கு ஒரு காரணம். ஆபாச படங்கள், வீடியோக்களை முதலில் தவிர்க்க வேண்டும். அதுவும் இதுபோன்ற சம்பவங்களில் பெரும் பங்காற்றுகிறது. குறிப்பாக 25 வயதிற்கு கீழ் உள்ளவர்களே இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது என கூறினார்.

Read Also -> 'சபரிமலை தந்திரிக்கு கேரள அரசு சம்பளம் வழங்கவில்லை' தாழமண்மடம் குடும்பம் விளக்கம்  

மேலும், இதுகுறித்து மனநல மருத்துவர் பூர்ணசந்திரிகா கூறுகையில், இதை மாற்றவே முடியாது என்பதில்லை; கட்டுப்படுத்த முடியும். பாலியல் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்குவது சட்டத்தின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். ஆனால், இங்கு அவ்வாறான நடைமுறை இல்லை. பாலியல் குற்றவாளிகள் சிறிது காலம் சிறையில் இருந்துவிட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்து சுற்றித்திரிக்கின்றனர். மேலும் மேலும் இதுபோன்ற தவறுகளில் ஈடுபடுகின்றனர். சட்டம் அவர்களை கண்காணிக்க தவறுகின்றது. அதனால் சட்டத்தின் பிடியில் இருந்து அவர்கள் எளிதாக தப்பி விடுகின்றனர்.

அதுபோல பாலியல் நோக்கத்துடன் அணுகுபவர்களை முன்கூட்டியே அடையாளம் காணத்தெரிவது அவசியம். இதற்கு விழிப்புணர்வே அடித்தளமாக அமையும். இதுமட்டுமின்றி, வலைத்தளங்களில் ஆபாச படங்களை பார்ப்பதும் இதற்கு ஒரு காரணமாக அமையலாம். குறிப்பாக, குழந்தைகளை ஆபாச படங்களில் ஈடுபத்துவதை முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும். ஏனென்றால், இதுபோன்ற சம்பவங்கள் அதனால் கூட நடக்க வாய்ப்பிருந்திருக்கலாம். சிறு பிள்ளைகளை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்துதல் சட்டப்படி குற்றமாகும். சட்டத்திற்கு புறம்பானதும் கூட என தெரிவித்தார்.

Read Also -> தொடரும் வேலை நிறுத்தம் ! பாதிக்கப்பட்டுள்ள வங்கிச் சேவை 

மேலும் அவர் கூறுகையில், பாலியல் வன்முறைகளை எதிர்காலங்களில் தடுக்க சில வழிகள் உள்ளன என கூறினார். அவை பின்வருமாறு... 

1. பள்ளிகளில் பாலியல் கல்வியை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்

2. முன்கூட்டியே குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஊட்ட வேண்டும். நல்ல தொடுதல் எது? கெட்ட தொடுதல் எது? என்பதாகும்.

3. தாயிடம் வெளிட்டப்படையாக பேச பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும். அதேபோல் பிள்ளைகள் ஏதாவது கூறினால், அதை பெற்றோர் செவிசாய்த்து கேட்கவேண்டும். திட்டவோ அடிக்கவோ கூடாது.

4. பிள்ளைகளை பாலியல் நோக்கத்துடன் அணுகுபவர்கள் வெளியாட்களைவிட பெரும்பாலும் அவர்களை சுற்றியுள்ளவர்களாகவே (குடும்பத்தில் உள்ளவர்கள் உட்பட) இருக்கின்றனர். எனவே, தாய் கவனத்துடன் இருத்தல் அவசியம்.

Read Also -> "நாட்டின் வரலாற்றில் மைல்கல் தருணம்" : மோடி பெருமிதம்

5. நடப்பது எதுவாயினும் அதை தாயிடம் வந்து கூற வேண்டும் என்பதை பெண் குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

6. படிக்கும் பருவத்தில் மாணவர்களையும் மாணவிகளையும் பேசக்கூடாது என கட்டுப்படுத்தாமல், அவர்களை உரையாட அனுமதிக்க வேண்டும். அப்போது தான்
அவர்களுக்கு அச்சம் நீங்கி பெண்களும் அவர்களை போல சமமான ஒரு பாலினம் என நினைக்க வழிவகுக்கும். தவறான கண்ணோட்டத்தில் அணுகுவதை தவிர்ப்பார்கள்.

7. பிள்ளைகள் பெற்றோர்களுடன் உரையாடுவதை அவர்கள் ஊக்குவிக்க வேண்டும். என்ன நடந்தாலும் அதை பெற்றோர்களிடம் வந்து கூற வேண்டும் என பிள்ளைகளை சிறு வயதில் இருந்தே பழக்கவேண்டும்.

8. பள்ளிகளில் ஆசிரியர்களும் தங்கள் மாணவிகளோடு அடிக்கடி உரையாட வேண்டும். வாரம் ஒருமுறை மாணவிகளோடு ஒரு சந்திப்பை பள்ளி ஆசிரியர்கள் நடத்த
வேண்டும்; அவ்வாறு நடத்தினால், தாயிடம் கூற தயங்கும் பிள்ளை கூட ஆசிரியரிடம் சொல்ல வழிவகுக்கும் என கூறினார். 

தன்னுடைய உயிரையும் ஒரு பாதியாய் சுமக்கும் பிள்ளையிடம் தந்தையே இவ்வாறு நடந்தால்? பிள்ளைகளை தான் சுமந்து பெறாவிட்டாலும், வாழ்நாள் முழுவதும்
பிள்ளைகளை தனது நெஞ்சில் சுமக்கும் ஓர் உன்னத உறவு தந்தை... என்பதுதான் கனத்த இதயத்துடன் நினைவுக்கு வருகிறது. பெண்ணை தெய்வமாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. சரிசமமாக, ஓர் உயிராக பார்த்தாலே போதும். அவளை வரையறுக்க வேண்டாம்! 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close