[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது

மனிதர் புகுந்தால் கடலும் நாசமாகும் ! காப்பாற்றுவோம் ஆலிவ் ரிட்லி ஆமைகளை

olive-ridley-turtle-hatching-begins-in-the-shores-of-chennai

நாம் வாழும் இவ்வுலகில்தான் பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகிறது. அதில் மிகப்பழமையான ஓர் உயிரினம்தான் ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகள். அதுவும் ஒவ்வொரு ஆண்டும் நம் அருகே இருக்கும் கடற்கரைகளில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை முட்டையிட்டு செல்கிறது. இந்த இவற்றை பாதுகாத்து சேகரிக்கும் பணியில் வனத் துறையும், சில தன்னார்வலர்களும் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். சென்னையைப் பொருத்தவரை விஜிபி, திருவான்மியூர், பெசன்ட்நகர் உள்ளிட்ட இடங்களில் வனத் துறை சார்பில் ஆமைக் குஞ்சு பொறிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

கடலோரங்களில் இருந்து சேகரிக்கப்படும் ஆமை முட்டைகள் இங்கு பாதுகாக்கப்படும். அவை இயற்கையான முறையில் 45 நாள்களுக்கு பிறகு முட்டையில் இருந்து வெளியேறும். பொதுவாக, காலை அல்லது மாலை நேரங்களிலேயே முட்டையில் இருந்து ஆமை குஞ்சுகள் வெளியேறும். அப்போது அவை சேகரிக்கப்பட்டு கடலுக்குள் விடப்படும். இந்த முட்டைகளைச் சேகரிக்கும் பணி இரவு 11 மணியளவில் தொடங்கி, அதிகாலை 5 மணி வரை நடைபெறும். கடற்கரை மணல் பரப்பில் குழிதோண்டி இடப்படும் முட்டைகள் சுமார் 45 நாள்களுக்குப் பிறகு இயற்கையாகப் பொறிந்து குஞ்சுகள் வெளியேறி கடலுக்குள் சென்றுவிடும்.


நாய், நரி போன்ற விலங்குகளாலும், சமூக விரோதிகளாலும் முட்டைகள் சேதமாக்கப்படுவதைக் கவனத்தில் கொண்டு, வனத் துறை முட்டைகளைப் பாதுகாத்து குஞ்சுகளைப் பொறிக்கச் செய்கிறது. இதனால், கடல் ஆமை இனங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த ஆமைகள் நாள் ஒன்றுக்கு 150 முதல் 200 குஞ்சுகளைப் பொறிக்கும். இங்கு சேகரிக்கப்படும் முட்டைகளில் இருந்து 95 சதவீத குஞ்சுகள் பாதுகாப்பாக பொறிக்கப்படுகின்றன.

அழிந்து வரும் உயிரினம் 

கடல்வாழ் உயிரினங்கள் அனைத்துமே இப்போது அழிவின் விளிம்பில்தான் இருக்கின்றன. அதில் இந்த ஆலிவ் ரிட்லி ஆமைகள் சுமார் 120 மில்லியன் ஆண்டுகளாக இந்த பூமியில் வாழ்ந்து வருகின்றன. இந்த ஆமைகள் எந்த இடத்தில் பிறக்கின்றனவோ, அங்கேதான் முட்டைகளை இடும். இந்தியாவைப் பொருத்தவரை தமிழகம் மற்றும் ஓடிசா மாநிலக் கரையோரங்களில் அதிகளவில் முட்டையிட்டு வருகின்றன.  நமது கடற்கரைகளில் இவை முட்டையிட்டு வருகின்றன. ஆலிவ் ரிட்லி ஆமைகள் மீனவர்களின் நண்பனாகப் பார்க்கப்படுகின்றன. இவை அழிந்தால் நிச்சயம் மீனவர்களுக்கே இழப்புதான். இவைதான் கடலில் இருக்கும் சொறி மீன்களை  உண்ணும். எனவே இவை இருந்தால், கடலின் ஆரோக்கியமான சூழல் கெடாமல் இருக்கும்.

ஆலிவ் ரிட்லி ஆமைகள் அக்டோபர் - நவம்பர் மாதங்களில்தான் இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். அப்போதுதான் அதிகமாக இவ்வகை ஆமைகள் இறந்து கரை ஒதுங்கும். இதற்கு காரணம் இழுவை மீன்பிடி கப்பல்களின் வலைகளில் இவை சிக்குவதுதான். ஒவ்வொரு ஆமையும் சுமார் 30 நிமிஷங்களுக்கு ஒருமுறை, சுவாசிப்பதற்காக கடலின் மேற்பரப்பிற்கு வரும். அப்படி வந்து சுவாசிக்க முடியாத சமயங்களில்தான் அவை உயிரிழக்கின்றன என்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close