[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

வடகிழக்குப் பருவமழை : தாமதம் ஏன் ?

why-is-delay-for-the-ne-monsoon-in-tamilnadu

தென்மேற்கு பருவக் காலங்களில் ஏற்படக்குடிய காற்று இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள காற்றை குளிர்ச்சியடைய வைக்கும். இதன் காரணமாக வட பகுதியில் காற்றின் அடர்த்தி அதிகமாககும், அப்போது காற்று அடர்த்தி குறைவாக உள்ள பகுதிகளில் அந்த ஈரக்காற்று வீசத்தொடங்கும். இந்த காற்று வடகிழக்கு திசையில் வீசுவதால் வடகிழக்குப் பருவ காற்று என்கிறோம். வடகிழக்கு பருவ காற்றால் ஏற்படக் கூடிய மழை வடகிழக்குப் பருவமழை ஆகும். இந்தியத் தீபகற்பத்தில் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பொழியும் மழையே வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். தென்மேற்கு பருவ காற்றால் குறைந்த அளவு மழையை மட்டுமே பெறும் தமிழகம், வடகிழக்குப் பருவமழையால் 60% முதல் 70% வரை மழை பெறுகிறது. 

Read Also -> 'கதை திருட்டு என சொல்வதே வருத்தமளிக்கிறது' சர்கார் குறித்து சமுத்திரக்கனி 

இக்காலத்தில் இந்தியாவில் ஆந்திரா, தமிழகம், புதுவை ஆகிய மாநிலங்கள் மற்றும் இலங்கையின் கிழக்கு கரையோர பகுதிகளில் மழை போழிவு இருக்கும். இந்தாண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் மாதம்  8ஆம் தேதி முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, டிட்லி புயலாக மாறி ஒரிசா நோக்கிச் சென்றதால், தமிழகத்தில் பருவ மழை தொடங்கவில்லை. இருப்பினும் தமிழகத்தில் அவ்வப்போது லேசான மழை பெய்தது. இதனைதொடர்ந்து அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக 15 ஆம் தேதி அளவில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியது.ஆனால் வங்கக் கடலில் ஏற்பட்ட தாழ்வுபகுதியாலும் காற்றின் திசை மாறியதாலும்  தமிழகத்தில் பருவ மழை தொடங்கவில்லை. இதனிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால் மழை போழிவு இல்லை.

Read Also -> இந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் ? இதனை கவனிக்க !

இதனையடுத்து தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் தமிழகம், புதுவையில் 26 ம் தேதிக்குப் பிறகு வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.ஆனால் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஒடிசா கரையை நோக்கி நகர்ந்ததால், தமிழகத்தில் மீண்டும்  பருவ மழை தள்ளிப்போனது என வானிலை மையம் தெரிவித்தது.

Read Also -> தீபாவளி சிறப்பு பேருந்துகள்.. முன்பதிவு மையம் இன்று திறப்பு


 
இந்நிலையில் அடுத்த இரு தினங்களில் வடகிழக்குப்பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புள்ளதாக நேற்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடக்கம் தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு தினங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது” என்று தெரிவித்துள்ளார். 

Read Also -> காப்புரிமை தொடர்பான இளையராஜாவின் வழக்கு தள்ளுபடி 

பருவமழை தாமதத்தால் மழைப்பொழிவு குறையுமா ?
 
இந்தாண்டு இதுவரை வடகிழக்குப் பருவமழை தொடங்காததால் மழைப்பொழிவு குறையும் என மக்கள் கவலை அடைகின்றனர். ஆனால் தமிழகத்தில் இந்த வருட வடகிழக்கு பருவமழை,சராசரி மழையளவை விட கூடுதலாக 12% மழையளவு கிடைக்கும் என்று  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வருடம் தமிழகத்தில் ,சராசரி மழையளவை விட கூடுதலாக மழையளவு கிடைக்கும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் கூடுதல் மழையளவு கிடைக்கும் என்பதால் விவசாயிகள் தயாரக இருக்க வேண்டும் எனவும் பன்னீர் செல்வம் அறிவுறுத்தியுள்ளார்.

Read Also -> தம்பிதுரையுடன் வாக்குவாதம் செய்த இளைஞர் - கூட்டத்தில் சலசலப்பு  

வடகிழக்குப் பருவமழையால் தமிழகத்தில் சராசரியாக 440 மி.மீ மழை கிடைக்கும். இந்நிலையில் கடலோர மாவட்டங்களில் அதிகளவிலான மழைப்பொழிவு இருக்கும் எனவும் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 10 சதவிதம் வரை அதிகமாக இருக்கும் எனவும் வானியல் ஆய்வாலர்கள் கூறுகின்றனர். தமிழகத்தின் சராசரி மழை அளவான 44 செ.மீ பதில் 50 செ.மீ மழை பதிவாகும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு தினங்களில் வடகிழக்குப்பருவமழை தொடங்கும். இதன்பின்னர் வரும் தினங்களில் படிப்படியாக மழை உட்புறங்களில் பெய்யத் தொடங்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close