[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

அது என்ன நெட் நியூட்ராலிட்டி? - ஒரு எக்ஸ்ரே ரிப்போர்ட்

what-is-net-neutrality-detailed-report

Net Neutrality- க்கு ஆதரவும் Airtel-ன் Airtel Zero திட்டத்திற்கு எதிர்ப்பும் வலுத்து வருகிறது. Net Neutrality- யை காக்கச் சொல்லி TRAI-க்கு லட்சக்கணக்கான மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட வாசகங்களையும் பேஸ்புக் பதிவுகளையும் சில மாதம் முன்பு பார்த்திருக்கலாம். இந்நிலையில் இணையச் சமநிலை எனப்படும் Net Neutrality க்கு ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு. மொதல்ல Net Neutralityனா என்னனு பாப்போம். 

* அனைத்து Internet Service Provider களும் உலகத்துல இருக்க அத்தனை வெப்சைட்டுகளையும் ஒரே மாதிரி பாரபட்சமற்ற முறையில்தான் நடத்த வேண்டும். நீதித்துறை, அரசு, காவல்துறை போன்ற அரசு அமைப்புகளைத் தவிர, எந்த இணைய தளத்தையும் தடை செய்வதற்கோ, குறிப்பிட்ட இணையதளங்களுக்கு வாடிக்கையாளரை நுழைய விடாமல் தடுப்பதற்கோ இந்த Service Provider-களுக்கு அனுமதி இல்லை.

* Internet Speed பாரபட்சமற்ற முறையில் அனைத்து தளங்களுக்கும் ஒரே மாதிரிதான் வழங்கப்பட வேண்டும். குறிப்பிட்ட இணைய தளங்களுக்கு அதி வேகத்தையும் மற்ற தளங்களுக்கு குறைவான வேகத்தையும் வழங்க கூடாது.

*  கட்டணத்தைக் காட்டி குறிப்பிட்ட இணைய தளங்களுக்கு முன்னுரிமை அளிக்க கூடாது. அதாவது குறிப்பிட்ட இணையதளங்களை பயன்படுத்த மட்டும் தனியாக கட்டணம் வசூலித்து அதன் அடிப்படையில் சேவை வழங்க கூடாது.

எல்லோருக்கும் இண்டெர்நெட் இலவசம் என்ற ஏர்டெல்லின் Airtel Zero திட்டம் கேக்குறதுக்கு நல்லாதான் இருக்கும். அம்பானி 500 ரூபாய்க்கு செல்போன் குடுத்தப்ப Post Paid connection-னா என்னனே தெரியாம சிரிச்சிட்டே வாங்கிட்டு 2000 ரூபாய்க்கு பில் வந்தப்ப திருதிருனு முழிச்சவங்க நாம. அதே திட்டம்தான் இந்த Airtel Zero rating. மேற்சொன்ன சர்வதேச Net Neutrality விதி சொல்லும் அனைத்து வரம்புகளையும் மீறுகிறது இந்த Zero rating. 

Airtel Zero என்பது ஏர்டெல் இணைப்பு வைத்திருக்கும் எல்லா வாடிக்கையாளருக்கும் இண்டெர்நெட் வசதி இலவசம். ஆனால் ஏர்டெல் லிஸ்ட் செய்திருக்கும் தளங்களில் மட்டும்தான் உலவ முடியும். மற்ற தளங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கு தனிக்கட்டணம். சரி, ஒழியட்டும். நாம காசு குடுத்துட்டு பயன்படுத்தலாம்னு நெனச்சா அப்பிடி இல்ல. ஒவ்வொரு வகையான வெப்சைட்டுகளுக்கும் ஒவ்வொரு வித தனித்தனியான கட்டணம் வசூலிக்கப்படும். இது கணினி, மொபைல் மூலம் செய்யும் Browsing மட்டுமல்லாது அனைத்து Mobile Application-களுக்கும் பொருந்தும்.

உதாரணத்துக்கு நாம அன்றாடம் பயன்படுத்துற ஃபேஸ்புக் இலவசம்னு வச்சிக்கோங்க. ட்விட்டருக்கு தனி கட்டணம். ஜிமெயில் இலவசம். அவுட்லுக் மெயில் பாத்தா தனி காசு. வாட்ஸ் அப் இலவசம், டெலிகிராம் வேற கட்டணம். NDTV free, Times Now பைசா. 
சரி, காசு குடுத்தா இந்த எல்லா வெப்சைட்டும் சராசரி வேகத்துல இயங்குமானு கேட்டா அதுவும் இல்ல. நீங்க விருப்பப்பட்ட இணைய தளங்களை கூடுதல் வேகத்தில் பார்க்க தனிக் கட்டணம்.

இன்னும் கொஞ்சம் எளிதா புரிஞ்சிக்க internet.org இந்தத் தளத்துக்கு போங்க. நீங்க Reliance வாடிக்கையாளரா இல்லனா இந்தத் தளத்தை உங்களால் Access பண்ண முடியாது. இதே போல நீங்க அன்றாடம் பயன்படுத்தும் தளங்களுக்குக் கட்டுப்பாடு வந்தால்…? இன்டெர்நெட் சேவையை வழங்குவது மட்டும்தான் நெட்வொர்க் நிறுவனங்களின் வேலை. நாம் எந்தத் தளத்தை எந்த வேகத்தில் திறக்க வேண்டுமென்பதை கட்டுப்படுத்துவதல்ல.

Airtel Zero திட்டத்துக்கு Flipkart ஆதரவளிக்க முன்வந்து இப்போ நம்மாள முடியாதுனு ஓடி வந்துடுச்சு. காரணம் இண்டெர்நெட் சுதந்திரம், நெட் நியூட்ராலிட்டினு Flipkart தரப்பில் சொல்லப்பட்டாலும், அமேசான், ஸ்நாப்டீல் போன்ற தனது போட்டியாளர்களோடு மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் இதே போல ஒப்பந்தம் போடலாம் என்ற பயம் வந்திருக்கலாம்.

Facebook, Twitter போன்ற சமூக வலைத்தளங்கள், Skype, Viber, FaceTime போன்ற VoIP (Data calls) apps, Whatsapp, Wechat, Telegram போன்ற Instant Messaging அப்ளிகேஷன்களால் தங்களுடைய traditional revenue (Voice call & SMS) குறைந்துவிட்டதாக TRAI-யிடம் நெட்வொர்க் நிறுவனங்கள் ஒப்பாரி வைக்க, TRAI-யும் அதை நியாயப்படுவதாக தெரிகிறது. ஆனால் Data packs மூலமாக வரும் வருமானத்தை வசதியாக மறந்துவிட்டார்கள். 2014 June-ல் 1400 கோடியாக இருந்த Data வருமானம் டிசம்பரில் 2100 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த வருவாயில் கிட்டத்தட்ட கால் பங்கு (23%) வருமானத்தை டேட்டா மூலமாக மட்டுமே இந்திய நெட்வொர்க் நிறுவனங்கள் கடந்த ஆண்டு ஈட்டியுள்ளது. 2017-ல் இந்த டேட்டா மூலம் கிடைக்கும் வருமானம் 5100 கோடியை தாண்டுமென கணக்கிடப்பட்டுள்ளது.

நெட்வொர்க் நிறுவனங்களை கட்டுப்படுத்தி வாடிக்கையாளர் பக்கம் நிற்க வேண்டிய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான TRAI, நம்ம TNEB கரண்ட் பில் ஏத்துறதுக்கு முன்னாடி கடமைக்காக ஒரு கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துவது போல நடைமுறைக்காக ஒரு கருத்துக் கேட்பு வைபவத்தை மிகக் குறைந்த கால இடைவெளியில் (ஏப்ரல் 24-க்குள்) நடத்திக்கொண்டிருந்தது. savetheinternet.in தளத்தின் மூலமா நீங்க Net Neutrality-க்கு ஆதரவா TRAI-க்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என்றும் சொல்லப்பட்டது. 

நாட்டிலுள்ள அனைத்து கிராமம், நகரங்களை இணையத்தால் இணைப்போம், Digital India-னு ஒரு புறம் பேசிட்டு மறுபுறம் நாம எந்த நியூஸ படிக்கணும், எந்த ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்ல பொருள் வாங்கணும், எந்தச் சமூக வலைத்தளத்த பயன்படுத்தணும்னு முடிவு செய்யப்போவது இந்த நெட்வொர்க் நிறுவங்கள்தான் என்றால் எங்கு போய் முட்டிக்கொள்வது என்ற சந்தேகம் பலருக்கும் வர மக்களின் கருத்தை கேட்டு Net Neutrality க்கு ஆதரவளிக்க முன்வந்தது மத்திய அரசு. ஆனாலும் கொள்கை ரீதியாக அந்த முடிவு தொடர்ந்து காலதாமதம் ஆகியே வந்தது.

இந்தியா போன்ற ஒரு வளரும் நாட்டில் இணைய வசதி கொஞ்சம் கொஞ்சமாக அனைவரையும் சென்றடையும் இந்த நேரத்தில், குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களின் நலனுக்காக எடுக்கப்படும் இம்மாதிரி முடிவுகள், கட்டுப்பாடுகள் இணைய பயனீட்டாளர்களின் அனுபவத்தைக் குறைத்து, இன்று பாரபட்சமின்றி எல்லோருக்கும் கிடைக்கும் இணைய வசதி இன்னும் பணக்கார சங்கதியாக மாறிவிடும் அபாயம் உள்ளதாக பல வல்லுநர்களும் தெரிவித்தனர். இதனையடுத்தே தற்போது Net Neutrality எனப்படும் இணைய சமநிலைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வழக்கம் போல் நாமும் எந்தப் பாரபட்சமோ, கட்டணமோ இன்றி இணையத்தில் உலாவலாம். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close