[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது

இதைப் படிக்க மறக்காதீங்க Top Stories 10.7.2018

top-stories-of-the-day


சென்னையில் பிரதான சாலையில் நடனமாடியபடி போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் போக்குவரத்து காவலர் ஒருவர் வாகன ஓட்டிகளிடையே பாராட்டுகளை பெற்றுவருகிறார். சென்னை மாநகராட்சி கட்டடப்பகுதி சிக்னலில் அதிவேகமாக விரையும் வாகன ஓட்டிகள் சிக்னலை கவனிக்கிறார்களோ,. இல்லையோ, இந்த போக்குவரத்து காவலர் ராஜேஷை கண்டவுடன் நின்றுவிடுகிறார்கள். காரணம் இவரது நடன அசைவுகள். 2003 இல் காவல் பணியில் சேர்ந்த ராஜேஷ், 13 ஆண்டுகள் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றினார். பின்னர், 2016 இல் போக்குவரத்து காவலராக பணிமாற்றம் செய்யப்பட்ட இவர், சாலையில் போக்குவரத்தை தனது ஸ்டைலில் கட்டுப்படுத்துகிறார்.

மேலும் படிக்க : https://goo.gl/F9h243

பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தின் சப்ராவில் உள்ளது தீபேஷ்வர் கியான் நிகேதன் பள்ளி. இங்கு 10-ம் வகுப்பு படித்து வந்தார் சிறுமி ஒருவர். இவரது தந்தை கடந்த டிசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஏழு மாதத்துக்குப் பிறகு சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரிடம் கதறி அழுத சிறுமி, கடந்த ஏழு மாதங்களில் 18 பேர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறினார். 

மேலும் படிக்க : https://goo.gl/RkFHvs

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவருடன் தனது மகள் காதலித்தாக நினைத்து ,அதனை வெட்கக்கேடு என கருதிய தந்தையும், பாட்டியும் அவரை கொன்றுவிட்டு நாடகமாடியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க : https://goo.gl/2G546F

வாட்ஸ்அப், மற்றும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு மத்திய அரசு சில தினங்களுக்கு முன் சில கோரிக்கையை முன் வைத்தது. அதில் வதந்திகள் பரப்பப்படுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கொலைகள் நடைபெறக் காரணமாகும் வதந்திகள் பரவுவதைத் தடுப்பதில் தங்களுக்கான பொறுப்பு மற்றும் கடமையை வாட்ஸ்அப் நிர்வாகம் தட்டிக்கழிக்க முடியாது என்று தொலைத் தொடர்பு மற்றும் மின்னணுவியல் துறை அமைச்சகம் அனுப்பிய குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க : https://goo.gl/WLVnJa

கர்நாடகாவில், இனி எந்த விஐபியின் பாதுகாப்பு வாகனம் சென்றாலும் அதற்காக ஆம்புலன்ஸ் காத்திருக்க தேவையில்லை. ஆம்புலன்ஸ் யாருக்கும் காத்திருக்காமல் செல்லலாம் என மாநில போலீஸ் தலைமை அதிகாரி ராஜூ தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க : https://goo.gl/6tzhLw

கர்நாடகாவில் நடந்த ஒரு கொலை சம்பவத்தில் நீதிபதி 13 நாட்களிலேயே தீர்ப்பு வழங்கியுள்ளார். நீதிபதி விரைவில் தீர்ப்பு வழங்க காரணமாக இருந்தது ஒரு மூன்று வயது குழந்தையின் சாட்சியம்தான்.

மேலும் படிக்க : https://goo.gl/CmtSUr

திருச்சி மாவட்டம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவர் துறையூரில் உள்ள வங்கி ஒன்றில் ரூ.90 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு சாலையில் நடந்து சென்றார். அப்போது கிருஷ்ணவேனி பையில் பணம் கொண்டு செல்வதை எப்படியோ? கொள்ளையர்கள் அறிந்துள்ளனர். இதனால் அவரைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 கொள்ளையர்களும் பணப்பையைப் பறித்தனர். 

மேலும் படிக்க : https://goo.gl/nQZETk

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close