[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
  • BREAKING-NEWS மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி
  • BREAKING-NEWS அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்

கவிழ்கிறதா கர்நாடகா அரசு ? காங்கிரஸே காலை வாருமா ? 

jjdu-government-losing-power-in-karnataka

கர்நாடகாவில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆரம்பித்தால், என்னால் ஒரு நிமிடம் கூட இந்த முதலமைச்சர் நாற்காலியில் இருக்க முடியாது என குமாரசாமி ஆரம்பித்து வைக்க இப்போது வரை இந்த ஆட்சியெல்லாம் நீடிக்காது என கணிப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் குமாரசாமி முதலமைச்சராக தொடர்ந்து கொண்டிருக்கிறார். காங்கிரஸ் எப்போது மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஆதரவளித்ததோ, அப்போது தொடங்கியது ,இந்த ஆட்சி கலையும் எனற அவதானிப்பும் ஆருடமும். 

கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையாவை அவரது நண்பரான ஜேடிஎஸ் கட்சியின் தேவகௌடா தோற்கடித்த நொடி, காங்கிரஸ் ஆட்சி அவ்வளவுதான் என்ற நிலை வந்தது. ஆனாலும் எப்படியாவது ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு வழியாக நீதிமன்றத்தாலும் எடியூரப்பாவாலும் நிறைவேறியது. இந்நிலையில் சமீபத்தில் சித்தராமையா சொல்லும் போது இந்த ஆட்சி 2019 தேர்தலுக்கு பின் நீடிக்குமா என கூற முடியாது என்றார். மீண்டும் தொடங்கியது புகைச்சல். பிரச்னைகளை தீர்க்க பயன்பட்ட சித்தராமையா பிரச்னைகளை உருவாக்குபவராக பார்க்கப்பட்டார். 

தொடர்ந்து எந்த பிரச்னைகள் வந்தாலும் ஆட்சி தொடரும், 2019 தேர்தலை இணைந்தே சந்திப்போம் என்பதே குமாரசாமியின் பதிலாக இருந்தது. இப்போது தேவகௌடா ஒரு படி மேலே சென்று 2019 தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு இடம் தருவோம் என்றும் கூட்டணியாக தேர்தலில் நிற்போம் என்றும் உறுதிபட தெரிவித்திருக்கிறார். இரண்டு கட்சி தலைவர்களும் எல்லா விவகாரத்திலும் வித்தியாசப்படுகிறார்கள், கருத்து தெரிவிக்கிறார்கள், ஆட்சி கலையும் என்ற எண்ணத்துக்கு தூபம் போடுகிறார்கள். 

கூட்டணி ஆட்சி என்ற முடிவான பின்னர், யார் யாரை அமைச்சராக்குவது என்ற கேள்வி பெரிய அளவில் இருந்தது. துணை முதலமைச்சராக பரமேஸ்வரா ஆனதை சித்தராமையா ஆதரவாளர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை ; காங்கிரஸ் எம்.எல்.ஏ பாட்டில் தனக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை என்று போர்க் கொடி, இன்னும் சிலர் இவர்களுக்கெல்லாம் அமைச்சர் பதவியா என போர்க்கொடி , ஆதரவை விலக்குவேன் என அபாய சங்கு ஊத, பிரச்னை சோனியா வரை சென்றது. ஆனால் குமாராசாமியோ நாற்காலியை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

 

ஒரு வழியாக பிரச்னைகளை முடித்தால், பட்ஜெட் தாக்கல் செய்வதில் பிரச்னை. ஜூலை 5-ல் பட்ஜெட் என குமாரசாமி அறிவித்தார். காங்கிரஸ் கட்சியை கலந்தாலோசிக்காமால் முடிவா ? காங்கிரஸ் கட்சியின் சாப்பாட்டில் ஜேடிஎஸ் வளர்வதா , எங்கள் சித்தராமையா அறிவித்த திட்டங்களுக்கு பட்ஜெட் என்ன சொல்ல போகிறது, இதனை ஜேடிஎஸ் பயன்படுத்தி ஜெயிக்க பார்க்கிறது என பொரிந்து தள்ளி விட்டார்கள். வழக்கம் போல் மீண்டும் புகைச்சல். ஆனால் ஆட்சி நீடிக்கும் , பிரச்னை இல்லை என குமாரசாமியும் தேவ கௌடாவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மறு பக்கம் எடியூரப்பா நேரம் பார்த்து காத்திருக்கிறார். அவர் கூறும் இந்த புனிதமற்ற கூட்டணியே , ஆட்சியே பாஜகவிடம் கொடுக்கும் நாளை எதிர்பார்த்திருக்கிறார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close