[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்

 “ரோகிணி மேல காவேரி” - ட்விட்டரில் வைரலாகும் அஜித் ரசிகர் வைரல் வீடியோ

twitter-trend-fans-speak-actor-ajith-hbdthalaajith

நடிகர் அஜித் பிறந்தநாளான இன்று அவரது ரசிகர்கள் பேசிய பேச்சு ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் அஜித் தனது 47 வது பிறந்த நாளை கொண்டாடுகிறாரோ இல்லையோ வழக்கம் போல அவரது ரசிகர்கள் அவரது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். அந்தச் செய்தி  #HBDThalaAjith என்ற  ஹேஷ்டேக்கில் காலையிலேயே ட்ரெண்ட் ஆனது. அவரது ரசிகர்கள் பலர் வாழ்த்து செய்தியை தெரிவித்து வந்தனர். நடிகை பார்வதி தனது ட்விட்டர் பக்கத்தில் “ நான் வெளிப்படையாக கூறுகிறேன். அவர் பர்ஃபெக்ட்டான ஜெண்டில்மேன். அவர் ரசிகர்களை சந்திப்பதில்லை. அவர் பத்திரிகையை சந்திப்பதில்லை. அவர் மீடியா வெளிச்சத்திற்கு வருவதே இல்லை. ஆனால் அவர் ரசிகர்கள் உடன் ஒரு மேஜிக்கான தொடர்பு வைத்திருக்கிறார். நேர்மையான ரசிகர்களை பெற்றிருக்கிறார். இதை தொடருங்கள் சார்” என குறிப்பிட்டிருக்கிறார். அதே போல மலையாள நடிகர் நிவின்பாலி “பிறந்தநாள் வாழ்த்துகள் தல” என பதிவு போட்டிருக்கிறார். இதற்கு ஒருபடி மேலே போய் மோகன்லால் கூட அஜித் பிறந்தநாளுக்கு வாழ்த்து செய்தி போட்டிருக்கிறார்.

அஜித்தின் விவேகம் பட நாயகியான காஜல் அகர்வால், “பிறந்தநாள் வாழ்த்துகள். அற்புதமான நடிகர் மற்றும் அவரோடு நான் திரையை பகிர்ந்துக் கொண்டிருக்கிறேன். அவரது உடல்நலம், மகிழ்ச்சி நிலைக்க வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டிருக்கிறார். விஜயின் ரசிகரான காமெடி நடிகர் சதீஷ், “தல அஜித் கடுமையாக உழைப்பவர்கள் அனைவருக்கும் ஒன் ஆப் த இன்ஸ்பிரேஷன்” என கூறியிருக்கிறார். 

அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ள வரலக்ஷ்மி சரத்குமார், “ஜெண்டில்மேன். கரிஷ்மாடிக் நடிகர்” என கூறியிருக்கிறார். 

அஜித் உடன் நடித்ததன் மூலம் மறு உயிர் பெற்ற அருண் விஜய் தனது பக்கத்தில் “எனக்கு தெரியும், அடக்கமானவர். இனிப்பான மனிதர்” என சுருங்க சொல்லி பெருக பேசியிருக்கிறார். நடிகை ஜனனி கூறியிருக்கும் செய்தியிலும் “ஜெண்டில்மேன்” என்ற வார்த்தை தவறாமல் இடம் பெற்றுள்ளது. அதேபோல பருக்கும் அவர் ஒரு உத்வேகம் என எழுதியிருக்கிறார். ரம்யா நம்பீசன், கெளதம் வாசுதேவ் மேனன் உட்பட பலரும் வாழ்த்தை அள்ளித் தெளித்துள்ளனர். “நான் விரும்பத்தக்க மனிதாபிமானம் உள்ள மனிதர் அஜித். மிக மரியாதையான நடிகர்களில் ஒருவர்.” என புகழ்கிறது கெளதம் ட்வீட்ஸ். ரம்யாவுக்கும் அஜித் ஒரு ஜெண்டில் மேன்தான். நீத்து சந்திரா கூட அஜித்தை மறக்காமல் வாழ்த்தியிருக்கிறார். 

இந்நிலையில் அஜித்தின் சென்னை ரசிகர் ஒருவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. #ரோகினிமேலகாவேரி என ஹேஷ்டேக் போட்டு பலரும் அதை பரப்பி வருகின்றன. அதாவது சமீபத்தில் ஒரு வார பத்திரிகை ‘அஜித்திற்கு தமிழுணர்வு இல்லை’ என்பதுபோல காவிரி விவகாரத்தில் எழுதியிருந்தது. அதாவது காவிரி பிரச்னைக்காக நடந்த சினிமா நட்சத்திரங்களின் போராட்டத்தில் அஜித் பங்கேற்கவில்லை. ஆகவே அது ஒரு சர்ச்சையாக உருவெடுத்திருந்தது. அதை கண்டிக்கும் விதத்தில் அந்த அஜித் ரசிகர், “ தலக்கு தமிழுணர்வு இல்லையாணு கேட்குறாங்க. தலக்கு தமிழுணர்வு இல்லைனு யார் சொன்னது? அவர்  திருவான்மியூர் வீட்டுக்கு முன்னாடி காவிரிக்காக வந்து நின்னாருனா ரோகிணி தியேட்டர் மேல காவிரி ஓடும்” என பொங்கியிருந்தார். ஆகவே அதையே ஹேஷ்டேக் ஆக போட்டு பலரும் பரப்பரப்பாக அதை பரப்பி வருகிறார்கள்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close