JUST IN
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை ஜூலை 7 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS நேபாளம், பூடானில் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை என புகார்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS மாணவிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கருணாநிதி சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரஜினி நன்கு படித்தவர்; அவரால் ஆங்கிலத்தில் உரையாற்ற முடியும்: பொன்.ராதா
  • BREAKING-NEWS எம்.பி மற்றும் எம்எல்ஏக்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும்:பொன்.ராதா
  • BREAKING-NEWS குளித்தலை: குப்பாச்சிபட்டியில் மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி வரியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS அஞ்சுகிராமம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS அஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ காந்திற்கு ரூ.5 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: விஜயகாந்த்
  • BREAKING-NEWS மே 17 இயக்கத்தினர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை முற்றிலும் ஏற்கக் கூடியது அல்ல: விசிக
சிறப்புக் கட்டுரைகள் 03 May, 2016 10:37 AM

குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் அவசியமா?

Cinque Terre

குழந்தையைக் குளிக்கவைப்பதற்கு முன், சுத்தமான தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றைத் தடவி மசாஜ் செய்வது நமது பாரம்பரியப் பழக்கம்தான்!

எண்ணெய் தடவி மசாஜ் செய்வதால் குழந்தைக்கு பல நன்மைகள் உள்ளன. குழந்தையின் தோல் சீராகப் பராமரிக்கப்படுகிறது. குழந்தையின் உடல் வெதுவெதுப்பாக இருக்க உதவுகிறது. குழந்தைக்கு உணவாகவும் ஒருவிதத்தில் பயன் தருகிறது. குழந்தையின் எடை அதிகரிக்கிறது. மன அழுத்தம் குறைவதால், குழந்தை அமைதி பெறுகிறது.

தாயின் தொடு உணர்வை குழந்தை மிகவும் விரும்புகிறது; எதிர்ப்பார்க்கிறது. அதனால், தாய் எண்ணெய் மசாஜ் செய்வது அதிகப் பலன் தரும். அப்பா, தாத்தா, பாட்டி, மற்ற உறவினர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள் எண்ணெய் மசாஜ் தரலாம்.

குழந்தை அமைதியாக, ஆனால் விழிப்புடன் இருக்க வேண்டும். பால் அல்லது உணவு கொடுத்து 2 மணி நேரத்துக்குப் பிறகு மசாஜ் தரலாம். தினமும் 2 அல்லது 3 முறை அல்லது ஒரு முறையாவது மசாஜ் செய்வது நல்லது. சுமார் 30 நிமிடங்களாவது தொடர்ந்து மசாஜ் செய்தால் நல்ல பலன் தெரியும்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads