[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

எத்தனை பேருக்கு தெரியும்? வேம்பின் உரிமையை மீட்டுக் கொண்டுவந்தவர் இந்த நம்மாழ்வார்! 

nammazhwar-anniversary-today-special-story

‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ படித்திருக்கிறீர்களா? உலகையே உலுக்கிப்போட்ட புத்தகம். மசனோபு ஃபுக்குவோக்கா எழுதிய அந்தப் புத்தகம்தான் உலகம் முழுக்க இருக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கையேடு. மசனோபு ஒரு ஜப்பானியர். வேளாண்மையில் அவர் செய்த புரட்சி உலகையே திரும்பி பார்க்க வைத்தது. தரிசாகக் கிடந்த நிலைத்தை பொன் விளையும் பூமியாக மாற்றி மாயாஜாலம் செய்தவர். அதுவரை விவசாயம் என்றால் உரச்சத்து, ஊட்டச்சத்து என்ற பெயரில் பயிரை நஞ்சாக்கியது போகாமல் நிலத்தையும் நாசமாக்கி கொண்டிருந்தார்கள் படித்த விஞ்ஞானிகள். இவர்தான் உரங்களை உதறித்தள்ளிவிட்டு இயற்கைக்குத் திரும்பச் சொல்லி அறைகூவல் விடுத்தார். இலைத்தழைகளை போட்டு இயற்கையை விளைவிக்க முடியும் என எடுத்துக்காட்டினார். இந்தப் புத்தகத்தை தனது உயிர்மூச்சாக எடுத்து கொண்டிருந்தார் நம்மாழ்வார். தமிழ்நாட்டில் பலகாலம் வரை நம்மாழ்வார் என்றால் ஆன்மிக அடையாளம்தான் ஞாபகம் வரும். அதை உடைத்து அதற்கு ஒரு போராட்ட முகம் கொடுத்தவர் இந்த நம்மாழ்வார். 

பலருக்கும் நம்மாழ்வாரை தெரியும். ஆனால் அவர் எங்கே வசிக்கிறார்? எந்த ஊரில் இருக்கிறார்? எத்தனை பிள்ளைகள்? அவரது குடும்பம் எங்கே இருக்கிறது? அவருக்கு உறவுகள் உண்டா? ஊதியம் உண்டா என எதுவும் தெரியாது. அந்தளவுக்கு தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு நதிபோல நடமாடியவர் இந்த ஆழ்வார். ‘நம்’மாழ்வார்.

உண்மையை சொல்லப்போனால் நம்மாழ்வாருக்கு ஊர் கிடையாது. வீடு கிடையாது. அவர் எங்கே இருக்கிறாரோ அங்கே ஒரு ஆயிரம்பேர் இருப்பார்கள். அத்தனை பேரும் அவருக்கு உறவு. எங்கே செல்கிறாரோ அந்த ஊரில் ஒரு குடில் அவருக்காக காத்திருக்கும். அதுதான் அவர் தங்கப்போகும் வீடு. அவருக்கு என்று தனிச் சொத்துக்கள் இல்லை. வங்கிக் கணக்குகள் இல்லை. ஆனால் வானத்தின் கீழாக இருக்கும் அத்தனைக்கும் அவர் சொந்தக்காரராக இருந்தார். உள்ளூர் தாண்டி உலகம் முழுக்க அவரை பின் தொடர்பவர்கள் இருந்தார்கள். ஒரு பச்சை துண்டு. அரை வேட்டி. ஒரேயொரு தலைப்பாகை. இதுதான் இந்தப் பெரியவரின் உடமை. ஆனால் அவர் இந்த உலகத்தில் சாதித்தது அதிகம். சொல்லிக் கொடுத்தது ஏராளம்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடுதான் நம்மாழ்வார் பிறந்தது. அண்ணாமலை பல்கலைக்கழக்கத்தில் பி.எஸ்.சி., அக்ரி படுத்தார். கோவில்பட்டி மங்கல வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் அவருக்கு அழகான வேலை கிடைத்தது. ஆறு ஆண்டுகள் பணியும் செய்தார். ஆனால் அவர் படித்த விவசாயம் நிலத்தை விஷமாக்க சொல்லிக் கொடுத்தது. இயற்கைக்கு எதிராக இருக்கிறோம் என அவர் மன உறுத்தியது. உடனே அவர் யோசிக்கவேயில்லை. அந்த வேலையை உடனே ராஜினமா செய்தார். நோபல் பரிசுப் பெற்ற டோமினிக் ஃபியர் என்பவரிடம் பணிக்கு சேர்ந்தார். அங்கே கிடைத்தது இவருக்கு உலக அறிவு. ஐரோப்பிய நாடுகள் முழுக்க பயணம் செய்தார். நம் நாட்டு வேப்பிலைக்கு காப்புரிமை வாங்கி வைத்திருந்தது பன்னாட்டு நிறுவனம். அதை அறிந்த இவர் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்தார். வெற்றி நம்மாழ்வார் வீட்டுக்கதவை தட்டியது. நமது வேம்பை மீட்டுக் கொண்டுவந்தார் இந்த மனிதர். இந்தச் சாதனையை யார் செய்திருக்க வேண்டும். அரசாங்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் ஒத்தை மனிதனாக உலகின் முன் போராடினார் நம்மாழ்வார். அந்தத் தைரியத்தை அவரது உயிர் மூச்சு பிரியும் வரை இருக்க பிடித்துக் கொண்டிருந்தது இவரது நெஞ்சு. 

ஒத்தநாடி உடம்பு, ஆயுள் முடிய போகும் காலம் என இந்த மனிதன் களப்பணியிலேயே கனவு கண்டு கொண்டிருந்தார். உறங்கவே இல்லை. உண்மை உங்களை உறங்க விடாது. அதற்கு பெயர்தான் உண்மை. நாளைய உலகம் நம்மை கட்டாயம் நம்பும் என அவர் உறுதியோடு நின்றார். அதன் விளைவுதான் இன்று மக்கள் இயற்கைக்குத் திரும்பி இருக்கிறார்கள். நிலம் பற்றிய கவலை உள்ள ஒவ்வொரு  மனிதனுக்குள்ளும் ஒரு நம்மாழ்வார் வாழ்கிறார். அவன் கூவும் ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் நம்மாழ்வார் நின்று கொண்டிருக்கிறார். இது மிகையல்ல. அதான் உண்மை. இன்று அவரின் பிறந்தநாள். ஏப்ரல் 6ல் மட்டுமா அவர் வாழ்கிறார். மண்ணை மலடாக்கும் ஒவ்வொரு போராட்டத்திலும் அவர் வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறார். இந்தப் பச்சை மனிதனை உலகம் உள்ளவரை யாரும் லேசில் மறந்துவிட முடியாது. மண்ணை மறப்பவன் தன் வரலாற்றை மறக்கிறான். வரலாற்றை மறப்பவன் தன் அடையாளத்தை இழக்கிறான். நம் அடையாளம் மண். இந்த மண்ணின் அடையாளம் நம்மாழ்வார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close