[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

பீட்டர்சன்: ஆஸி.யை மிரட்டிய இங்கிலாந்து வீரர்!

kevin-pietersen-confirms-retirement-from-cricket

சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன். அவரது முடிவை வரவேற்றிருக்கிறார்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள். 

104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பீட்டர்சன், 8 ஆயிரத்து 181 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் 23 சதங்கள், 35 அரைசதங்கள். 136 ஒருநாள் போட்டிகளில்  நான்காயிரத்து 440 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 9 சதம், 25 அரைசதங்கள் அடங்கும். 37, டி20 போட்டிகளில் விளையாடி, 1,176 ரன்கள் எடுத்திருக்கிறார்.

தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர்

பீட்டர்சன் இங்கிலாந்துக்காக விளையாடினாலும் அவர் பிறந்து வளர்ந்தது, தென்னாப்பிரிக்காவில். அம்மா இங்கிலாந்தைச் சேர்ந்தவர். தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டில் இன ரீதியான ஒதுக்கீடு முறையை எதிர்த்து அங்கு விளையாடுவதை விட்டுவிட்டு இரண்டாயிரமாவது ஆண்டு இங்கிலாந்து சென்றார், கிரிக்கெட்டுக்காக! அம்மா, இங்கிலீஷ் ஆர்ஜின் என்பதால் அனுமதி கிடைத்தது. அதற்கு முன், தகுதி தேர்வுக் காலமான நான்கு வருடங்கள் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடினார். நாட்டிங்கம்ஷையர் அணிக்காக ஆடிய பீட்டர்சனின் ரன் வேகத்தைப் பார்த்து, இங்கிலாந்தின் ஒரு நாள் கிரிக்கெட் டீமில் சேர்த்தார்கள். 2004-ல் ஜிம்பாப்வே-வுக்கு எதிராக அறிமுகமான இவர், டெஸ்ட் போட்டியில் 2005-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அனல் பறக்கும் ஆஷஸ் தொடரில் அறிமுகமானார். 

‘ஸ்விச் ஹிட்’ முறை பேட்டிங் ஸ்டைலை கிரிக்கெட்டில் அதிகமாகப் பயன்படுத்தியது இவர்தான் என்கிறார்கள். அதாவது வலதுகை பேட்ஸ்மேனான பீட்டர்சன், பந்துவரும்போது இடதுகை பேட்ஸ்மேன் ஸ்டைலில் அடித்து பந்துவீச்சாளரை திணறடிப்பது.

முழுமையான வீரர்

ஒருநாள், டெஸ்ட், டி20 என மூன்று வித போட்டிகளிலும் அதிகமான ரன்கள் குவித்த இரண்டாவது இங்கிலாந்து வீரர், பீட்டர்சன்தான். இங்கிலாந்து வென்றிருக்கிற 4 ஆஷஸ் தொடரிலும் பீட்டர்சன் பங்கு கணிசமான ஒன்று. 2008-ல் ’முழுமையாக கிரிக்கெட் வீரர்’ என்று டைம்ஸ் பத்திரிகையும், ‘இங்கிலாந்தின் பெருமைமிகு நவீன கிரிக்கெட் வீரர்’ என்று தி கார்டியனும் இவரை புகழ்ந்து மகிழ்ந்தன. 

சர்ச்சைகள்

பீட்டர்சனுக்கும் சர்ச்சைக்கும் பஞ்சம் இல்லை. எதையும் வெளிப்படையாகப் பேசிவிடும் பீட்டர்சன், இங்கிலாந்து அணியின் ஒரு நாள், மற்றும் டெஸ்ட் கேப்டனாக ஆகஸ்ட் 2008-ல் நியமிக்கப்பட்டார். ஜனவரி 2009-ல் விலகிவிட்டார். இந்தக் குறுகிய கால விலகலுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பயிற்சியாளர் பீட்டர் மூரேஸ் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறு பாடுதான் காரணம். இதற்கு பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கும் பீட்டர்சனுக்குமான முட்டல் மோதல் முடிவில்லாமல் நீண்டு கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில் கடுப்பான பீட்டர்சன், 2012-ல் சர்வதேச ஒரு நாள் போடியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற நாட்டு வீரர்களுக்கும் அதிர்ச்சிதான். ஏனென்றால் அப்போது அவரது ஃபார்ம் அவ்வளவு சிறப்பாக இருந்தது.

பிறகு வற்புறுத்தல் காரணமாக தனது ஓய்வு முடிவை மாற்றிக்கொண்டார். பின்னர் நடந்த தென்னாப்பிரிக்கத் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கும் டெஸ்ட் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ், ஒரு நாள் போட்டி கேப்டன் குக் மற்றும் சில வீரர்களுடன் அவருக்கான உறவு சுமூகமாக இல்லை. இதனால் கடைசி டெஸ்ட்டில் நீக்கப்பட்டார், பீட்டர்சன்.

காரணம், கேப்டன் ஸ்டிராஸ், பயிற்சியாளர் ஆன்டி பிளவர் குறித்து தரக்குறைவான எஸ்.எம்.எஸ். அனுப்பியதுதான் என்பது பிறகு தெரிய வந்தது. அதற்காக மன்னிப்புக் கேட்ட பீட்டர்சன், ‘சும்மா, கிண்டலுக்காக மெசேஜ் செய்தேன். தரகுறைவான வகையில் ஏதும் சொல்லல. அதுக்காக ஸ்டிராஸ் மற்றும் அணி நிர்வாகத்திடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார் பீட்டர்சன்.

மிரட்டிய குக்

அப்போதிருந்து பீட்டர்சனை ஓரங்கட்டத் தொடங்கியது இங்கிலாந்து அணி. இனி, அணியில் தன்னை சேர்க்க மாட்டார்கள் என்று முடிவு செய்துவிட்டார் பீட்டர்சனும். இருந்தும் அணியில் இடம் பிடிக்க பல முறை முயற்சித்தும் கண்டு கொள்ள வில்லை யாரும். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனர் ஸ்டிராஸ் (முன்னாள் கேப்டன்தான்)  சிஇஓ, டாம் ஹாரிஸ் ஆகியோரைச் சந்தித்து பேசியும் பாசிட்டிவ் பதில் இல்லை. பீட்டர்சனை மீண்டும் சேர்த்தால் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்குப் போட்டு விடுவேன் என இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் அலெஸ்டர் குக் நிர்வாகத்திடம் மிரட்டியதாகக் கூட தகவல்கள் பரவின.

வெறுப்பில் இருந்த பீட்டர்சன், ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ், இந்தியாவின் ஐபிஎல், பாகிஸ்தானின் பிஎஸ்எல் போன்ற டி20 போட்டிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார் அதிகமாக. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த பிக்பாஷ் போட்டியின் போதே விரைவில் ஓய்வு முடிவை அறிவிக்க இருப்பதாகச் சொன்ன பீட்டர்சன், இப்போது தனது ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். அவரது முடிவை, முன்னாள் வீரர்கள் பலர் வரவேற்றுள்ளனர். 

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப், ‘இன்னும் நீங்கள் விளையாடுகிறீர்கள் எனத் தெரியவில்லை. உங்கள் சிறப்பான கிரிக்கெட் வாழ்க்கைக்கு வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார். இவரைப் போல வெஸ்ட் இண்டீஸ் அணியின் டேரன் ஷம்மி உட்பட பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். 

’ உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை சிறப்பாக முடித்துவிட்டீர்கள். சிறந்த பேட்ஸ்மேனான உங்களுடன் விளையாடியதை நினைத்து பெருமைப்படுகிறேன். ஆஸ்திரேலிய அணிக்கு பயத்தை அளித்த முதல் பேட்ஸ்மேன் நீங்கள்தான்’ என புகழ்ந்துள்ளார், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான்.

இப்படியொரு பாராட்டு எல்லாருக்கும் கிடைத்துவிடுவதில்லைதான்!

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close