[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

தனித்துவிடப்பட்டாரா வைரமுத்து?

vairamuthu-on-andal-issue

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சூழல் இருந்தது. வைரமுத்து கவிதைகளின் தாக்கத்தில் கல்லூரிகளுக்கு தமிழ்ப் படிக்க புயலாய் புறப்பட்டார்கள் பல இளைஞர்கள். குறிப்பாக வைரமுத்து பயின்ற சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு நிறையபேர் தமிழ்ப் பயில வந்தார்கள். ’திருத்தி எழுதிய தீர்ப்புகள்’, ’இன்னொரு தேசியகீதம்’, ’இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல’ போன்ற அவரின் கவிதைத் தொகுப்புகள் இளைஞர்கள் கைகளில் இருக்கும். ’பொன்மாலைப் பொழுது’, ’சின்ன சின்ன ஆசை’ என வைரமுத்துவின் கவிதை வரிகளுக்கு ரசிகர்களின் கூட்டம் கூடிக் கொண்டே சென்றது. கலைமாமணி விருது, சாகித்ய அகாதமி விருது, பத்மபூஷன் விருது, தேசிய விருதுகள் என விருதுகளை அள்ளிக் குவித்தார் அவர். 

புகழின் உச்சியை தொட்ட வைரமுத்து இன்று சர்ச்சைக்குள் சிக்கியுள்ளார். ஆண்டாள் குறித்து அவர் வாசித்தக் கட்டுரையில், இண்டியானா பல்கலைக்கழக ஆசிரியரின் குறிப்பை சுட்டிக்காட்டி, ஆண்டாள் தேவதாசி மரபை சேர்ந்தவராக இருக்க வாய்ப்புள்ளதாக கூறியதற்குதான் இவ்வளவு எதிர்ப்பும். அதுவும் ஆண்டாளை புகழ்ந்து எழுதிய மிகப்பெரிய ஒரு சுட்டுரையில் ஒரு சிறிய குறிப்புதான் இது. வைரமுத்து மீதான இந்தச் சர்ச்சையை முதலில் கிளப்பியவர் ஹெச்.ராஜா. சொல்லக் கூசும் அளவிலான வார்த்தைகளால், வைரமுத்துவை விமர்சித்து தள்ளினார் ஹெச்.ராஜா. 

ஹெச்.ராஜா தொடங்கிய புள்ளியை பிடித்துக் கொண்டு பலரும் வைரமுத்துவை தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றனர். இதில் என்ன ஆச்சர்யம் என்றால், விமர்சிப்பவர்களின் பெரும்பாலோனோர் பாஜக மற்றும் அதிமுகவை சேர்ந்தவர்கள். சிலர் இந்துமத ஆதரவாளர்கள். அதிமுக தரப்பில் முதலில் விமர்சித்தவர் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன். அவரை தொடர்ந்து, மைத்ரேயன் வைரமுத்துவிற்கு எதிராக களத்தில் குதித்தார். தற்போது அமைச்சர் கடம்பூர் ராஜூவும் வைரமுத்துவை திமுகவோடு சேர்த்து விமர்சித்துள்ளார். 

வாய்வழி விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க, வைரமுத்துவிற்கு எதிராக போராட்டங்களும் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகின்றன. ஆண்டாளை இழிவுபடுத்திப் பேசியதாகக் கூறி கவிஞர் வைரமுத்துவை கண்டித்து கோவில்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்து அமைப்புகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால் எதிர்ப்பை தொடங்கிய பாஜக முழு வீச்சில் போராட்டத்தைக் கையில் எடுக்கவில்லை. இது ஒரு மக்கள் போராட்டமாக, இந்து அமைப்புகளின் போராட்டமாக அரசியல் சாயம் இல்லாதப் போராட்டமாக முன்னிருத்தப்படுகிறது. 

வைரமுத்துவிற்கு எதிர்ப்புகள் தொடங்கிய நாளில் இருந்து அது கூடிக் கொண்டே செல்கிறது. ஆனால் ஆதரவுக் குரல் மிகவும் தாமதமாகவே எழுந்தது. வைரமுத்துவிற்கு எதிரான கடும் விமர்சனங்களை தொடக்கத்தில் வெளிப்படையாக யாரும் கண்டிக்கவே இல்லை. முதலில் உரக்கக் குரல் கொடுத்தவர் இயக்குநர் பாரதிராஜா. நடிகர் விவேக், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் ட்விட்டரில் வைரமுத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். திமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் வைரமுத்துவுக்கு ஆதரவுக் குரல் எழுப்பாமல் மவுனம் காத்தது. 

        

ஸ்டாலின், சீமான், வைகோ, உள்ளிட்ட பல கட்சி தலைவர்களும், பிரபலங்களும் மிக தாமதமாகவே வைரமுத்துவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். தன்னை ஒரு நாத்திகனாக வெளிப்படுத்திக் கொண்ட வைரமுத்து, திமுகவுடன் நெருக்கமாக இருந்து வருகிறார். மேலும் முற்போக்கு சிந்தனைக் கொண்ட கவிஞர் என்ற அடையாளம் காணப்படுகிறார். ஆனால் திமுக மிகவும் தாமகதமாக அவருக்கு ஆதரவு தெரிவித்ததோடு, பட்டும் படாமல் பேசியுள்ளதாக பலரால் பார்க்கப்படுகிறது. இந்துமதம் மட்டுமல்ல; எந்த மதத்தையும் விமர்சிப்பதை திமுக ஆதரிக்காது, வைரமுத்து மன்னிப்பு கேட்ட பிறகும் பூதாகரமாக்கி விஷயத்தை வளரவிடுவது நல்லதல்ல என்று ஸ்டாலின் கூறினார். அவ்வளவுதான். அதேபோல்தான், இடதுசாரி கட்சிகளின் தலைவர்களும், ஆதரவு நிலைப்பட்டை உடனடியாக தெரிவிக்கவில்லை. ஏன் இந்தத் தயக்கம் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

சமீப காலமாக வைரமுத்து பாஜகவுடன் நெருக்கம் காட்டி வந்ததாக அவர் மீது ஒரு விமர்சனம் உள்ளது. பாஜக தலைவர்களுள் ஒருவரான தருண் விஜய் திருக்குறளின் பெருமையை பரப்புகிறேன் என்று தமிழகம் வந்த போது அவருக்கு வைரமுத்து முழு ஆதரவு அளித்தார். மேலும் அவரை உயர்த்திப் பிடித்தார். அந்த வெறுப்பு பலரை வைரமுத்து மீது கோபம் கொள்ள செய்திருந்தது. பிரதமர் மோடி குஜராத்தி மொழியில் எழுதி  ‘சிந்தனைக் களஞ்சியம்’ என்று மொழிபெயர்க்கப்பட்ட புத்தகத்தின் வெளியிட்டு விழாவில் வைரமுத்து கலந்து கொண்டார். இதுவும் அவர் மீதான விமர்சனத்தை அதிகரிக்கச் செய்தது.

          

வைரமுத்துவுக்கு எதிராகக் கண்டனங்கள், போராட்டங்கள் என எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. அதேவேளையில், ஆண்டாளை இழிவுபடுத்திப் பேசியதாகக் கூறி கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக சென்னை கொளத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட மூன்று இடங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு எழுத்தாளனாக தான் தெரிவித்த கருத்துக்கு உறுதியுடன் நின்று அவர் குரல் எழுப்பி இருக்க வேண்டும் என்றும், வருத்தம் தெரிவித்திருக்கக் கூடாது என்றும் சிலர் கூறியுள்ளனர். 

இது குறித்து தமிழ்தேசிய சிந்தனையாளர் ஆழிசெந்தில் நாதன் கூறுகையில், “கருத்துரிமைக்காக போராடக் கூடியவர்கள் மத்தியில் வைரமுத்து மீது ஒரு விமர்சனம் உள்ளது. பொதுவாகவே ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படக் கூடியவர் என்ற விமர்சனம் உள்ளது. விருதுகள் கிடைப்பதற்காக பாஜக, மோடிக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்தார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. வருத்தம் தெரிவித்து கொண்டபோதும், ஆராய்ச்சிக் கட்டுரையை கோடிட்டு காட்டுவதற்கு உரிமை இருக்கிறது என்று கூறியிருக்க வேண்டும்” என்றார். 

          

நீண்ட எதிர்ப்புகளுக்கு இடையே வைரமுத்து தனது மவுனத்தை களைத்துள்ளார். தன் மீது எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேவதாசி என்பது ஆண்டாள் காலத்தில் மிக மிக உயர்ந்த பொருளில் வழங்கப்பட்ட வார்த்தை. கடவுளுக்கு மட்டுமே சேவை செய்வதற்காகத் தம் மொத்த வாழ்வையும் ஒப்படைத்துக் கொண்ட உயர்ந்த பெண்களுக்கே தேவரடியார் அல்லது தேவதாசி என்ற திருப்பெயர் வழங்கப்பட்டு வந்தன. அவர்கள் கடவுளுக்கு மட்டுமே சொந்தமானவர்கள். பின்னாளில் தேவதாசி என்ற உயர் பொருள் நிலவுடைமைச் சமூகத்தால் பொருள் மாற்றம் பெற்றது” என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.

மன்னிப்பு கேட்க மாட்டேன் என்பதை சூசகமாக கூறியுள்ள வைரமுத்து ஆண்டாள் குறித்த தன்னுடைய கருத்துக்கு மேலும் வலுசேர்த்துள்ளார். அதற்கான ஆதாரங்களையும் பட்டியலிட்டுள்ளார். வைரமுத்துவின் இந்த அறிக்கையோடு அவர் மீதான சர்ச்சை முடிவு வருமா? அல்லது தொடருமான என்று பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close