[X] Close
JUST IN
 • BREAKING-NEWS பொறையார் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர்
 • BREAKING-NEWS மெர்சலில் அரசியல் விமர்சனங்களை தொடங்கியிருப்பது சினிமாதுறைக்கும், அரசியலுக்கும் நல்லதல்ல: பொன்.ராதா
 • BREAKING-NEWS டெல்லியில் பட்டாசு வெடிக்க, விற்க உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் காற்று மாசு குறைந்தது
 • BREAKING-NEWS டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: திருமா
 • BREAKING-NEWS பொறையார் போக்குவரத்துக் கழகம் அருகே தொழிற்சங்கத்தினர் போராட்டம்
 • BREAKING-NEWS இந்தியாவின் நம்பகமான பிராண்ட் கூகுள்: ஆய்வில் தகவல்
 • BREAKING-NEWS பொறையார் அரசு போக்குவரத்துக்கழக கட்டட உயிரிழந்தவர்களில் 7 பேர் ஓட்டுநர், ஒருவர் நடத்துநர்: அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS பொறையாரில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மேற்கூரை இடிந்து விபத்து; 8 பேர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்திற்கு வந்தார் கருணாநிதி
 • BREAKING-NEWS கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன்: ஓவியா
 • BREAKING-NEWS ஆசிய கோப்பை ஹாக்கி: மலேசிய அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி
 • BREAKING-NEWS நிலவேம்பு குடிநீர் குறித்து பேசுவதற்கு கமல் மருத்துவரோ, விஞ்ஞானியோ கிடையாது: கடம்பூர் ராஜூ
 • BREAKING-NEWS டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை: சுகாதாரத்துறை செயலர்
 • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: எல்லையில் ராணுவ உடையில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார் பிரதமர் மோடி
சிறப்புக் கட்டுரைகள் 10 May, 2017 08:54 PM

ஆபத்தை அழைத்து வரும் ஃபேஸ்புக்.....

facebook-brings-danger

முகம் தெரியாத நபர்களுடன் தொடர்பு படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், மற்றவர்களின் கருத்துக்களை தெரிந்து கொள்வதற்கும், விவாதங்கள் செய்வதற்கும், உலகின் எந்த மூலையில் உள்ளவர்களோடும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள பயன்படுகிறது. அதேசமயம் முகம் தெரியாத நபர்களோடு ஏற்படும் தொடர்புகள், பலரின் வாழ்க்கையையும், குடும்பங்களையும் குலைத்துப் போடவும் செய்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த ஆசிரியை நிவேதிதா, சென்னை அண்ணா நகரில் கார் ஏற்றிக் கொல்லப்பட்டார். கோவையிலிருந்து தன்னுடைய முகநூல் நண்பரைச் சந்திக்க சென்னை வந்த நிவேதிதாவை அவருடைய முன்னாள் காதலர் இளையராஜா கார் மூலம் மோதி கொன்றுள்ளார். நிவேதிதாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த சம்பவத்தில் நிவேதிதாவின் முகநூல் நண்பர் கணபதி பலத்த காயமடைந்து கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கார் ஏற்றிக் கொலை செய்த தீயணைப்பு வீரர் இளையராஜாவும் தற்போது உயிரோடு இல்லை. சென்னை புழல் சிறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். பல மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தைக் கற்றுத்தரும் பொறுப்புள்ள ஆசிரியையாக இருக்க வேண்டிய நிவேதிதா, பேஸ்புக் மூலம் சென்னையில் உள்ள ஒரு நபருடன் நட்பாகி உறவாடி, அவரை சந்திக்க சென்னை வந்து தற்போது உயிரை விட்டிருக்கிறார்.

ஏற்கெனவே கணவரை பிரிந்து வாழ்ந்த நிவேதிதாவின் குழந்தைகள் இப்போது அனாதைகளாக நிற்கின்றனர். தன்னோடு தொடர்பில் இருந்த நிவேதிதா, புதிதாக முகநூல் நண்பருடன் பழகுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் கொலை செய்து, சிறை சென்று, இப்போது தற்கொலையும் செய்து கொண்டுள்ளார் இளையராஜா. முகநூல் நண்பர் கணபதியும் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட முறையற்ற முகநூல் உறவுகளால் இம்மூவரின் குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இறந்தாலும், அந்தக் குடும்பங்கள் காலம் முழுவதும் அவமானத்தில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த வாரம், திருப்பூரைச் சேர்ந்த 13 வயது சிறுமி கோடை விடுமுறையில் முகநூலிலேயே மூழ்கிக் கிடந்துள்ளார். அவர் சிவா என்ற வாலிபருடன் முகநூலில் நட்பாகி கதைகள் பல பேசி அவரிடம் நெருக்கமாகியுள்ளார். இவரும் நேரில் சந்தித்து எங்காவது வெளியூர் சென்று மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று திட்டமிட்டுள்ளனர். சிறுமியை சென்னை அழைத்துவந்த சிவா, சிறுமியின் நகையை விற்று செலவு செய்துள்ளார்.

சென்னையிலிருந்து பாண்டிச்சேரி சென்று அங்கு பேருந்து நிலையம் அருகே ஒரு விடுதியில் அறை எடுத்து இருவரும் தங்கியுள்ளனர். சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக சொல்லி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார், சிவா. இதனால் அழுது புலம்பிய சிறுமிக்கு, விடுதியில் வேலை செய்த பாண்டியன், ஆறுதல் சொல்வதுபோல் அரவணைத்து அவரும் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். எப்படியோ அங்கிருந்து தப்பி, கையில் இருந்த மிச்ச பணத்தை வைத்து திருப்பூர் வந்து சேர்ந்துள்ளார், அந்த சிறுமி. நடந்த சம்பவம் பற்றி பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர், 8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி பேஸ்புக் நண்பரை நம்பியதால் நடந்த விபரீதம் இது.

அறிமுகமில்லாத நபர்களோடு முகநூலில் நண்பர்களாக இருப்பது கூட தவறில்லை. ஆனால் பொய்முகங்கள் கொண்ட பேஸ்புக் நபர்களை கண்டறிவது முக்கியம். முக்கியமாக எந்த ஒரு தனிப்பட்ட அந்தரங்க தகவல்களையும் முகநூலில் பகிர்வது தவறு. நேரடி அறிமுகம் இல்லாத பேஸ்புக் நபர்களோடு பொது பிரச்சனைகளை வெளிப்படையாக விவாதிப்பது தவறில்லை. ஆனால் தனிப்பட்ட மெசேஜ் மூலம் பேசுவது. தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்வது மிகவும் தவறானது. அப்படிப் பேசுகின்ற பழக்கத்தையே தவிர்க்க வேண்டும். பேசத் தொடங்கினால் அதுவே பழக்கமாகிவிடும். வார்த்தைகளில் காட்டும் அக்கறையை உண்மை என நம்பத் தொடங்கி விடுவோம். “சாப்டீங்களா?, உடம்பு சரியில்லையா? ரெஸ்ட் எடுங்க” என்பதுபோல அக்கறையாகப் பேசித்தான் மனதைக் கவர்வார்கள். அன்பும், அக்கறையும் இல்லாத குடும்பங்களில் உள்ளவர்கள் இந்த முகம் தெரியாத பாசத்துக்கு எளிதாக அடிமையாகி விடுவார்கள்.

அதேபோல் குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்காதீர்கள். அவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் எப்படி ஜாக்கிரதையாக இயங்க வேண்டும் என்று தெரியாது. உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் அறிவை நமது உள்ளங்கைக்குள் கொண்டு வரும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள், ஆபத்தையும் சேர்த்தே கொண்டு வருகின்றன என்ற விழிப்புணர்வு அவசியம்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close