[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

2016-ன் டாப் 10 மொபைல் செயலிகள்

top-10-mobile-app-in-2016

வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் கடந்த சில ஆண்டுகளில் ஸ்மார்ட்போன்கள் சிறப்பான உயரத்தை எட்டியுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றவர்களுடன் பேசுவதற்கு பயன்படுகிறதோ இல்லையோ பேசுவதை தவிர அனைத்திற்கும் பயன்படுகிறது. இளைஞர்கள் மத்தியில் ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்கள் பொழுதுபோக்கிற்காக மட்டுமே அதிகம் பயன்படுத்துவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த ஆண்டு ஸ்மார்ட்போன்களில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மொபைல் செயலிகள் என்ன என்பது நீல்சன் நிறுவனத்தின் மின்னணு மொபைல் அளவீடு ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஸ்மார்ட்போன்களில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் முதலிடத்தில் உள்ளது பேஸ்புக். இதையடுத்து பேஸ்புக் நிறுவனத்தின் சாட் ஆப்பான பேஸ்புக் மெசேன்ஜர் இடம் பெற்றுள்ளது.

பலரும் ஆடியோ மற்றும் டெக்ஸ்ட்களை விட வீடியோவையே அதிகம் விரும்புகின்றனர். அந்த வகையில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது யு டியூப்.
இதையடுத்து பலருக்கு வழித் தோழனாக உதவும் கூகுள் மேப் இடம் பெற்றுள்ளது.

தற்போது உள்ள மனிதர்களுக்கு என்சைக்ளோபீடியாவாக உள்ளது கூகுள் தேடல். இது டாப் 10 பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
ஸ்மார்ட்போன்களில் பல விளையாட்டு ஆப்களை தரவிறக்கம் செய்யப் பயன்படும் கூகுள் பிளே ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

ஜிமெயில் ஏழாவது இடத்தையும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் இன்ஸ்டாகிராம் அடுத்த இடத்தையும் பிடித்துள்ளன.
இதை தொடர்ந்து அப்பிள் மொபைளில் உள்ள பிரத்யேக ஆப்பான மியூசிக் ஆப் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. பட்டியலில் இறுதியாக அமேசான் ஆப் இடம் பெற்றுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close