[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

10,000 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்து விட்டது சமையல்

prehistoric-people-may-have-cooked-wild-grains-and-plants-in-pots-as-early-as-10-000-years-ago

ஆதிகாலத்தில் மக்கள் உணவுக்காக விலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சிகளை உணவாக உண்டதாக நாம் வரலாற்றில் படித்துள்ளோம். ஆனால் மனிதர்கள் 10,000 வருடங்களுக்கு முன்பே காட்டு தானியங்கள் மற்றும் தாவரங்களை வைத்து பானைகளில் சமைத்து உண்டதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் மனிதர்கள் ஆரம்பத்தில் சைவமாகத்தான் இருந்திருக்கின்றனர். பிறகுதான் அவர்கள் விலங்குகளை வேட்டையாடிச் சாப்பிடும் அசைவத்திற்கு மாறியிருக்கின்றனர்.

லிபியாவில் உள்ள சஹாரா பாலைவனத்தில் இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு மனிதர்கள் சமைத்து உண்டதற்கான மட்பாண்ட துண்டுகள், அவர்கள் பயன்படுத்திய தானியங்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று வறண்டு கிடக்கும் சஹாரா முன்பு வளமான ஏரிகள் மற்றும் ஆறுகள் உள்ள இடமாக இருந்திருக்கலாம் என்றும் அங்கு நிறைய மனிதர்கள் வாழ்ந்து வந்ததாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

இதுகுறித்து பிரிஸ்டல் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ஜூலி டன்னே கூறுகையில், ‘10000 ஆண்டுகளுக்கு முன்பு லிபியன் சஹாரா பாலைவனத்தில் ஏரிகள் மற்றும் ஆறுகள் இருந்திருக்கலாம். அங்குள்ள மக்கள் நீர்வாழ் தாவரங்கள் மற்றும் இலை தாவரங்கள், பழங்களை உட்கொண்டுள்ளனர். மேலும் அங்கு நீர்யானைகள் மற்றும் பல பெரிய விலங்கு கூட்டங்களும் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளது. அங்கு வாழ்ந்த மக்கள் சமைத்து சாப்பிட்டதற்கான மட்பாண்டங்கள், உணவுப் பொருட்களை அரைக்கப் பயன்படுத்திய கற்கள் போன்றவை அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஆசியாவில் 16 ஆயிரம ஆண்டுகளுக்கு முன்பும் வட ஆப்பிரிக்காவில் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் மட்பாண்டங்கள் பயன்பாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாவர உணவில் ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் அறிந்து வைத்திருந்தார்கள். அன்று செழித்திருந்த சஹாரா இயற்கையின் கோர விளையாட்டினால் இன்று முற்றும் துறந்த பாலைவனமாகியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close