JUST IN
 • BREAKING-NEWS மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
 • BREAKING-NEWS என் நாடிநரம்பில் ஓடுவதெல்லாம் கண்ணதாசனின் வரிகள் : இளையராஜா
 • BREAKING-NEWS எதிர்ப்புகள் வந்தால்தான் அரசியலில் ரஜினியால் சிறந்து விளங்க முடியும்: குருமூர்த்தி
 • BREAKING-NEWS அசாம்: கவுகாத்தியில் ரூ.2கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
 • BREAKING-NEWS இந்தியிலும் பாஸ்போர்ட் என்பதை திரும்பப்பெற வேண்டும்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS ஸ்டாலின் முதல்வராகிவிடுவார் என்ற பயத்தில் ரஜினியை முன்னெடுக்கிறது பாஜக : சீமான்
 • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய அணி
 • BREAKING-NEWS சசிகலா கூறியதால் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது: விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS மகாராஷ்ட்ராவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு
 • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் கைதான 8 தமிழக மீனவர்களுக்கு ஜூலை 7 வரை காவல்
 • BREAKING-NEWS நீட் தேர்வால் குழப்பமான கல்வி சூழல் உருவாகியுள்ளது: பிரின்ஸ் கஜேந்திரபாபு
 • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா நிறைவேற்றம்
சிறப்புக் கட்டுரைகள் 14 Nov, 2016 05:08 PM

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பும்...டாப் டென் வதந்திகளும்...

Cinque Terre

கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையாக பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது முதல் வாட்ஸ் அப்பிலும், இணையத்திலும் பல்வேறு வதந்திகள் உலா வரத் தொடங்கியுள்ளன.
போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்:
பிரதமர் மோடியின் அறிவிப்பை எதிர்த்து நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சங்கத்தைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தல் செய்யப்போவதாக வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் தீயாகப் பரவியது. ஆனால், இந்த தகவல் உண்மையில்லை என்று அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

புதிய ரூபாய் நோட்டுகளின் கள்ள நோட்டுகள்:

 மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய 2,000 ரூபாய் நோட்டுகளின் கள்ளநோட்டுகள் ஏற்கனவே புழக்கத்துக்கு வந்துவிட்டதாக நெட்டிசன் ஒருவர் கொளுத்திப் போட, அது ட்ரெண்டாகத் தொடங்கியது. அந்த கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக கர்நாடக மாநிலம் சிக்மகளூர் சந்தை ஒன்றில் ரூ.2,000 நோட்டு கள்ளநோட்டு கண்டெடுக்கப்பட்டதாக புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலாகப் பரவியது. விசாரித்ததில், பிங்க் கலரில் உள்ள புதிய 2 ஆயிரம் நோட்டை யாரோ ஒரு அதிகப்பிரசங்கி கலர் ஜெராக்ஸ் எடுத்தது தெரியவந்ததாகத் தகவல் வெளியானது.

புதிய ரூபாய் நோட்டில் நானோ சிப்:
     
கருப்புப்பணத்தை நிரந்தரமாக ஒழிக்கும் வண்ணம் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளில் மத்திய அரசு நானோ சிப்பைப் பொருத்தியிருப்பதாகவும், இதன் மூலம் அந்த நோட்டுகள் இருக்கும் இடத்தை செயற்கைக் கோள் மூலம் கண்காணிக்கலாம் என்றும் அறிவியல் பூர்வமான விளக்கத்துடன் சமூக வலைதளங்களில் ஒருசிலர் கருத்து தெரிவித்தனர். இந்த கேள்விக்கு விளக்கமளித்த நிதியமைச்சர் ஜேட்லி, அதனை அடைப்படை ஆதாரமற்ற வதந்தியாகப் பார்ப்பதாக முடித்துக் கொண்டார்.

டெல்லி ஷாப்பிங் மால் திருட்டு:

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் டெல்லி உள்ளிட்ட நாட்டின் சில இடங்களில் மக்கள் கொள்ளையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின. டெல்லியில் உள்ள ஷாப்பிங் மாலில் மக்கள் திருடுவது போன்ற வீடியோ பதிவு ஒன்று வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ குறித்து விளக்கமளித்த டெல்லி போலீஸ், ஷாப்பிங் மால்களில் யாரும் திருட முயற்சிக்கவில்லை என்று தெரிவித்தனர்.

உப்பு தட்டுப்பாடு:

ரூபாய் நோட்டுகளைப் போலவே உப்புக்கும் நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், இதனால் நாட்டின் பல பகுதிகளில் உப்பு கிலோ ஒன்றுக்கு ரூ.400-க்கு மேல் விற்கப்பட்டதாகவும் வதந்தி பரவியது. இதுகுறித்து களத்தில் இறங்கி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், இந்த தகவலில் உண்மையில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார்.
 
டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு 200 சதவீத அபராதம்:
 
ரூபாய் 2.5 லட்சத்துக்கு அதிகமாக வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு 95 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என்ற தகவல் சிறு வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை கலங்கடித்தது. ஆனால், அது உண்மையல்ல. முறையான கணக்கு இல்லாமல் சட்டவிரோத வழிகளில் சேர்க்கப்படும் பணத்துக்கு மட்டுமே இது பொருந்தும் என்று நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

புதிய ரூபாய் நோட்டுகளும், பாஜக தலைவர்களும்... புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியாவதற்கு முன்னே அது பாஜக தலைவர்கள் பலரது கைகளுக்கும் சென்று விட்டதாக பெரிய விவாதத்தினை சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது. குறிப்பாக உ.பி. மாநில பாஜக தலைவரான கேசவ் பிரசாத்தின் மகள் தனது கையில் ரூ.10,000-த்துக்கான 2,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பது போல ஒரு புகைப்படம் ட்விட்டரில் வெளியானது. ஆனால், தேர்தல் உறுதி மொழிப்பத்திரத்தில் தனக்கு 2 மகன்கள் மட்டுமே மகள் இல்லை என்று குறிப்பிட்டிருந்தது இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
 
ரூபாய் நோட்டுகள் இல்லாததால் வன்முறை:
   
போதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்காததால் நாடு முழுவதும் வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களின் வாயில்களில் பெரும் வன்முறை வெடித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்பட்டது. உண்மையில் பெரிய அளவிலான வன்முறைச் சம்பவங்கள் நடக்கவில்லை என்பதே உண்மை.
 
செல்லாத நோட்டு அறிவிப்பும், உயிரிழப்புகளும்:

 செல்லாத நோட்டு அறிவிப்பால் ரூபாய் நோட்டுகளை மாற்ற வரிசையில் நின்றவர்கள் பலர் இறந்ததாகத் தகவல் வெளியானது. அவ்வாறு உயிரிழந்தவர்கள் ஏதாவது ஒரு உடல் நலக்குறைவாலேயே இறந்ததாக, அவர்களது உறவினர்களாலேயே விளக்கம் அளிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.


மைல் நீள வரிசைகள்:

வங்கிகளில் பணம் மாற்ற மக்கள் மிகப்பெரிய வரிசையில் நிற்பது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. விசாரித்ததில் அந்த புகைப்படங்கள் காஷ்மீர் பிரச்னையின்போதும், கென்யாவில் வாக்குப்பதிவு நடந்தபோதும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பது தெரியவந்தது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads