[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

மகாராஜா எக்ஸ்பிரஸில் திருமணம் செய்ய ரூ.5.5 கோடி

a-wedding-on-wheels-for-rs-5-5-crore

5.5 கோடி ரூபாய் செலவு செய்ய தயார் என்றால் இந்தியாவில் மிகவும் ஆடம்பரமான சொகுசு ரயிலான மகாராஜா எக்ஸ்பிரஸில் திருமணம் நடத்திக் கொள்ளலாம். ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் இதற்கான திட்டத்தை தயாரித்து வருகிறது.

திருமணத்தை வித்தியாசமான முறையில் ஆடம்பரமாக நடத்துவதை சிலர் விரும்புகிறார்கள். விமானத்திலும், நீருக்கு அடியும், கப்பலிலும், மலை உச்சியிலும் ஆடம்பரமாக திருமணம் நடத்துவார்கள். இதேபோல் சில உயர்தரப் பணக்காரர்கள் திருமணத்தை சுற்றுலாவுடன் சேர்ந்து அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயிலில் திருமணம் நடத்திக்கொள்ளும் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்ய உள்ளது. இது தொடர்பாக ஐ.ஆர்.சி.டி.சி.யின் மேற்கு மண்டல உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் ’ மணமகன், மணமகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் திருமணத்தை தங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக நினைவு கூறுவதற்காக இந்த திட்டத்தை நாங்கள் அமல்படுத்தவுள்ளோம்’ என்றார். எட்டு நாட்கள் திருமணச் சுற்றுலாவிற்கு மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில் முழுவதையும் முன் பதிவு செய்யலாம். இதற்கு 5.5 கோடி ரூபாய் செலவாகும். மொத்தம் 88 பயணிகள் பயணிக்கலாம். இந்த ஆடம்பர சொகுசு ரயிலில் மொத்தம் 24 பெட்டிகள் உள்ளன.

இவற்றில் 43 விருந்தினர் அறைகள் உள்ளன. இதில் 20 டீலக்ஸ், 18 ஜூனியர் சூட்கள், 4 சூட்கள் மற்றும் ஒரு பிரசிடென்சியில் சூட் உள்ளிட்டவையும் அடங்கும்.

இந்த மகாராஜா ரயிலில், ஹெரிடேஜ் டூர் மற்றும் பனோரமா டூர் ஆகிய இரு பேக்கேஜ்களில் உள்ளன. ஹெரிடேஜ் டூர் என்பது மும்பையில் இருந்து புறப்பட்டு அஜந்தா, உதய்பூர், ஜோத்பூர், பிகானீர், ஜெய்பூர், ரன்தம்பூர் மற்றும் ஆக்ரா வழியாக டெல்லி செல்லும். மொத்தம் 8 நாட்கள் பயணிக்கும். இந்த ரயிலில் பயணிக்க ஒரு நபருக்கு ரூ.4.5 லட்சம் கட்டணம் ஆகும். பிரசிடென்சியல் சூட் எனில் 15.8 லட்சம் ரூபாய் ஆகும். பனோரமா டூர் என்பது டெல்லியில் இருந்து புறப்பட்டு ஜெய்பூர், ஆக்ரா, குவாலியர், கஜுராஹோ, வாரனாசி மற்றும் லக்னோ வழியாக சென்று மீண்டும் டெல்லியை அடையும்.

திருமணம் தவிரி பாலிவுட் சினிமா சூட்டிங், பேஷன் நிகழ்ச்சிகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் நிகழ்ச்சிகள் உள்ளட்டவைகளை மகாராஜா ரயிலில் நடத்திக்கொள்ளும் வசதியை, அறிமுகம் செய்ய ஐ.ஆர்.சி.டி.சி. முடிவு செய்துள்ளது. இந்த தகவலை ஐ.ஆர்.சி.டி.சி.யின் மேற்கு மண்டல செய்தி தொடர்பாளர் பினாகின் மோரவாலா தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close