[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தஞ்சையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சிய
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

அனல் பறக்கும் ஆன்லைன் பட்டாசு விற்பனை !

crackers-sale-in-online

தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி ஆன்லைனில்‌ பட்டாசு விற்பனை தீவிரம் அடைந்துள்ளது. இந்த ஆண்டு 200 முதல் 300 கோடி ரூபாய் வரை ஆன்லைனில் பட்டாசு வர்த்தகம் நடைபெறும் என்று ஆன்லைன் பட்டாசு வர்த்தகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 29-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுவதையொட்டி சிவகாசியில் பட்டாசு விற்பனை தீவரமடைந்துள்ளது. சிவகாசிக்கே நேரில் சென்று பட்டாசு வாங்குவோர் ஒருபுறம் இருக்க, மறுபுறம், ஆன்லைனில் பட்டாசுகளை வாங்குவோர் அதிகரித்து வருகிறார்கள்.

சிவகாசியில் கிடைக்கும் நியாயமான விலைக்கே ஆன்லைனில் தரமான பட்டாசுகளை வழங்கி வருவதால் நாளுக்கு நாள் ஆன்லைனில் பட்டாசு விற்பனை அதிகரிப்பதாகவும் கூறுகிறார்கள் ஆன்லைன் பட்டாசு வர்த்தகர்கள்.

சுமார் 300 வகையான பட்டாசுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுவதோடு, ஆர்டர் செய்து ஒரு வாரத்திற்குள் வாடிகையாளர்களுக்கு கிடைக்கும் வகையில் டோர் டெலிவரி செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

சிவகாசியில் உள்ளவர்கள் கூட வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் வசிக்கும் உறவினர்களுக்கு எளிமையான முறையில் ஆன்லைன் பட்டாசுகள் அனுப்புவதாக கூறுகிறார்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளாக குறிப்பிட்ட சில பட்டாசு விற்பனை நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்தை நடத்தி வந்த நிலையில் இந்த ஆண்டு 250க்கும் அதிகமான பட்டாசு விற்பனை நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள‌ன.

கடந்த ஆண்டு 100 கோடி ரூபாய் ஆன்லைன் பட்டாசு வர்த்தகம் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு வர்த்தகம் பல மடங்கு அதிகரித்து 200 முதல் 300 கோடி ரூபாய் ஆன்லைன் பட்டாசு விற்பனை நடைபெறும் என ‌வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க வாட்ஸ் அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மூலமாகவும் பட்டாசு விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.

ஆன்லைன் வர்த்தகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சிலர் இதனை பயன்படுத்து தரமற்ற பட்டாசுகளை அதிக விலைக்கு விற்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இதனால் வாடிக்கையாளர்கள் ஒரு முறைக்கு பல முறை ஆராய்ந்து ஆலோசித்து பின்னர் ஆர்டர் பதிவுசெய்ய வேண்டும் என அறிவுறுத்துகின்றனர் வணிகர்கள்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close