[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

குழந்தைகளைக் கவரும் 3 டி ஹெட் செட், செல்போன் வைத்து விளக்கை அணைக்கலாம்... 2016ன் டாப் 5 கேட்ஜெட்டுகள்

2016-s-top-5-head-to-lure-children-for-3-d-sets-you-can-turn-off-the-lights-put-the-cell-phone

2016 ஆம் ஆண்டு பல கேட்ஜேட்டுகள் வெளிவந்து சந்தையை அலங்கரித்தன. எனினும் தொழில் நுட்பம் புதுமை எனும் அடிப்படையில் அதில் முதல் 5 இடங்களை பிடித்த ஸ்மார்ட் கேட்ஜட்டுகள் பற்றிப் பார்ப்போம்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 ப்ளஸ்..

இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் பல ஐபோன்களை வெளியிட்டது. அவற்றில் அதிநேர்த்தியான வடிவமைப்பிலும் ஸ்மார்ட்டாகவும் வெளிவந்த மாடல் ஐபோன் 7 ப்ளஸ்தான் பெரும் வரவேற்பைப் பெற்றது. 128 ஜிபி முதல் 256 ஜிபி வரை சேமிப்பு திறன் கொண்டிருப்பது அதன் முக்கிய அம்சம். எச்டி டிஸ்ப்ளேயுடனும் 3 டி தொடுதிரையுடனும் வெளிவந்தது. 3ஜி நெட்ஒர்க்கில் 7எஸ் பிளஸ் மாடலில் 21 மணி நேரம் வரை போனைப் பயன்படுத்தலாம். பிரேத்யேகமாக ‘A10 பியூசின்’ சிப்கள் பொருத்தப்பட்டுள்ளது. வாட்டர் புரூப் மற்றும் டஸ்ட் ரெஸிஸ்டண்ட் வசதியுடன் வெளிவந்த ஐபோன் 7 ப்ளஸ் ஐபோன் மாடல்களிலே ஸ்மார்ட் அன்ட் பெஸ்ட் மொபைலாக வெளிவந்து சந்தையில் முதலிடத்தைப் பிடித்தது.

3 டி பரிமாணத்தில் விளையாடும் சோனி நிறுவனத்தின் விஆர் ஹெட்செட்...

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் கலக்கிய சோனி நிறுவனம் வி.ஆர் ஹெட்செட் எனும் 3டி ஹெட்செட்டை கடந்த ஜூன் மாதம் முதல் விற்பனைக்கு கொண்டு வந்தது. வீடியோ, ஆடியோ இரண்டையும் மேம்பட்ட தரத்தில் வழங்ககூடிய வி.ஆர் ஹெட்செட் பிளேஸ்டேஷன் விளையாட்டுச் சாதனைத்தில் மார்க்கெட்டை கலக்கியது. இதற்கு முன் எச்டிசி போன்ற பல நிறுவனங்கள் 2டி வகை ஹெட்செட்டையே அறிமுகப்படுத்தின. ஆனால் முதன்முறையாக முப்பரிமாணத்தில் காட்சி கொடுத்து விளையாடுபவர்களுக்கு புது அனுபவத்தை அளிக்கும் விதத்தில் அறிமுகமானது இந்த 3டி ஹெட்செட்.

கூகுள் அறிமுகப்படுத்திய பிக்சல் ஸ்மார்ட்போன்...

கூகுள் நிறுவனம் தொழில் நுட்பத்தில் பல வெற்றி படைப்புகளைக் கொடுத்தாலும், கடந்த அக்டோபர் மாதம் அதன் புது முயற்சியாக அறிமுகம் செய்த பிக்சல் போன்கள் வசூலில் கலக்கின.

கூகுள் பிக்சல் 32ஜிபி இன்டர்னல் மெமரியுடன் வெளிவந்தது. ஸ்மார்ட் வடிவமைப்பு, ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் போன்ற அண்மை தொழிநுட்பங்கள் பல இருந்தாலும் 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 7 மணி நேரம் வரை தாங்கக்கூடிய பேட்டரி திறனே இந்த கூகுள் பிக்சலின் பளிச் அம்சம்.

செவி போல்ட் கார்...

பல கார்கள் விதவிதமாக சந்தையை அலங்கரித்த போதிலும் இந்த வருடம் செவி போல்ட் கார் மின்சார கார் தொழில்நுட்பத்தில் ஓர் மைல்கல் என்றே கூறலாம். கடந்த நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தபட்ட ‘செவி போல்ட்’ கார் மிகச்சிறிய பிரகாசமான முகப்பு விளக்குகளைக் கொண்டது. இந்தக் காரின் பேட்டரி சக்தியால் சுமார் 238 மைல் வரை விரும்பிய வேகத்தில் செல்ல முடியும். நீண்ட தூர ஜெனரல் மோட்டார்ஸ் போல்ட் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் போனால் கட்டுப்படுத்த முடியும் ப்ளு டூத் ஸ்மார்ட் பல்ப்.....

ஸ்மார்ட் போன் மூலம் கட்டுப்படுத்த முடிகிற வகையில் ப்ளூ டூத் ஸ்மார்ட் பல்ப் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரத்தை மிச்சப்படுத்தும் சிக்கனமான இந்த பல்பின் ஆயுள்காலம் 15 ஆண்டுகள் எனக் கூறப்படுகிறது. ப்ளு டூத் தொழிநுட்பத்துடன் கூடிய இந்த கஸா எல்இடி புதிய படைப்பு என்ற வரிசையில் சந்தையை ஒளிப்படுத்தியது. ஸ்மார்ட்போனிலிருந்து ப்ளு டூத் மூலம் விளக்கை கட்டுப்படுத்த முடியும். கவுண்டவுன் செட் செய்து விட்டால் தானாகவே அணையகூடிய திறனும் இந்த விளக்குகளுக்கு உண்டு.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close